சதுரகிரி மலைக்கு பக்தர்கள் 4 நாட்கள் செல்லலாம்: வனத்துறையினர் அனுமதி
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பிரதோஷம், பவுர்ணமி தின வழிபாட்டிற்காக பக்தர்கள் 4 நாட்கள் சென்று வர வனத்துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர்.
பேரையூர்,
மதுரையை அடுத்த சாப்டூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறையினர் 4 நாட்கள் அனுமதி வழங்கிஉள்ளனர். இதுகுறித்து சாப்டூர் வனச்சரகர் பொன்னுசாமி கூறியதாவது:-
சாப்டூர் வனப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமாகலிங்கம், சந்தனமகாலிங்கம் கோவிலில் பிரதோஷம், பவுர்ணமியை முன்னிட்டு நாளை (வியாழக் கிழமை) முதல் ஏப்ரல் 1-ந்தேதி வரை பக்தர்கள் கோவிலுக்கு வழிபட செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை வழியில் செல்ல வேண்டும். அனுமதிக்கப்பட்ட பாதையில் மட்டுமே பக்தர்கள் செல்லவேண்டும். காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே மலை ஏறவும், இறங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்போ, பின்போ பக்தர்கள் சென்று தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதியை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது கோடை காலம் என்பதால், மலையில் பக்தர்கள் இரவில் தங்கும் நிலை ஏற்பட்டால் கோவில் வளாகத்தில் மட்டுமே தங்க வேண்டும். வேறு வன பகுதிகளில் பக்தர்கள் தங்ககூடாது. மலை பாதையில் செல்லும் முன்பு பக்தர்கள் தீப்பிடிக்கக்கூடிய பொருட்களை கண்டிப்பாக எடுத்து செல்லக்கூடாது.
மேலும் பிளாஸ்டிக் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு செல்வதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும். வழியில் தென்படும் விலங்குகளை தொந்தரவு செய்யகூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.