உழவர், உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.2¾ கோடி வேளாண் எந்திரங்கள்

திருவள்ளூர் மாவட்ட உழவர், உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.2 கோடியே 80 லட்சம் மதிப்புள்ள வேளாண் எந்திரங்களை கலெக்டர் சுந்தரவல்லி வழங்கினார்.

Update: 2018-03-27 22:15 GMT
திருவள்ளூர்,

உணவு தானிய உற்பத்தியை 2 மடங்காக பெருக்கவும், அதன் மூலம் விவசாயிகளின் வருமானம் 3 மடங்கு அதிகரிக்க செய்யும் வகையில் அரசு பல்வேறு வேளாண் நலத்திட்டங்களை விவசாயிகளுக்கு அளித்து வருகிறது. தற்போது கூட்டுப்பண்ணைய திட்டம் அறிவிக்கப்பட்டு இத்திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்திற்கு 56 உழவர் உற்பத்தியாளர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுக்கள் தங்களுக்கு தேவையான வேளாண் எந்திரங்களை கொள்முதல் செய்வதற்கு ஒரு உழவர், உற்பத்தியாளர் குழுவுக்கு ரூ.5 லட்சம் வீதம் 56 குழுக்களுக்கு ரூ.2 கோடியே 80 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி வேளாண் எந்திரங்கள் வழங்கும் விழா திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் சுந்தரவல்லி தலைமை தாங்கினார். திருவள்ளூர், கடம்பத்தூர், பூண்டி வட்டார குழுக்களில் இருந்து கூட்டுப்பண்ணைய திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 56 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.2 கோடியே 80 லட்சம் மதிப்புள்ள வேளாண் எந்திரங்களை கலெக்டர்வழங்கினார்.

அப்போது அவருடன் வேளாண்மை இணை இயக்குனர் பாண்டியன், மாவட்ட வேளாண்மை தரக்கட்டுப்பாடு உதவி இயக்குனர் எபினேசன், வேளாண்மை உதவி இயக்குனர்கள் பிரதாப்ராவ், கலாதேவி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் முத்துதுரை, உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் புதுமாவிலங்கை தாஸ் மற்றும் திரளான விவசாயிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்