அ.தி.மு.க. அழிந்து விடக்கூடாது என்பதற்காக அரசியலுக்கு வந்தேன் ஜெ.தீபா பேச்சு

அ.தி.மு.க. அழிந்து விடக்கூடாது என்பதற்காக அரசியலுக்கு வந்தேன் என ஜெ.தீபா கூறினார்.

Update: 2018-03-27 23:00 GMT
பட்டுக்கோட்டை,

ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அசோகன் தலைமை தாங்கினார். கணநாதன் முன்னிலை வகித்தார். விழாவில் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

எம்.ஜி.ஆரை அண்ணா அரசியலுக்கு அழைத்து வந்தார். ஜெயலலிதாவை எம்.ஜி.ஆர். அரசியலுக்கு அழைத்து வந்தார். அரசியலில் ஜெயலலிதா மாபெரும் வெற்றி பெற்று முதல்–அமைச்சரானார்.

அரசியலுக்கு அழைப்பு


ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. தொண்டர்கள் என்னை அரசியலுக்கு அழைத்தனர். வஞ்சகர்களிடம் சிக்கி அ.தி.மு.க. அழிந்துவிடக்கூடாது என்பதற்காக அரசியலுக்கு வந்தேன். ஆனால் பெண் என்றும் பாராமல் அச்சுறுத்துகிறார்கள். இதை எல்லாம் கண்டு நான் அஞ்சவில்லை. எனது கனவு மக்களின் முன்னேற்றம் தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்