நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருந்தவரால் பரபரப்பு
நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த மணவை கண்ணன், கலெக்டர் அறையின் வெளியே உள்ள வராண்டாவில் கோரிக்கை எழுதப்பட்ட காகிதத்தை கையில் பிடித்தபடி அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
நாகர்கோவில்,
வறட்சியாலும், புயலாலும் பாதித்த விவசாயிகளுக்கு ஆதரவாக போராடியதால் கோபம் அடைந்து பழிவாங்கும் கூட்டுறவுத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரியும், மணவாளக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் வாக்காளராக்க மறுக்கும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் 27–ந் தேதி (அதாவது நேற்று) கலெக்டர் அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக இளம் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகி மணவை கண்ணன் அறிவித்திருந்தார்.
அதன்படி நேற்று காலை நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த மணவை கண்ணன், கலெக்டர் அறையின் வெளியே உள்ள வராண்டாவில் கோரிக்கை எழுதப்பட்ட காகிதத்தை கையில் பிடித்தபடி அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. உடனே இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நேசமணிநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாய்லட்சுமி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் மணவை கண்ணனிடம் பேசி அவரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்த இணைப்பதிவாளர் நடுக்காட்டு ராஜா, மணவை கண்ணனை கூட்டுறவு சங்கத்தில் வாக்காளராக சேர்க்க சாத்தியம் இருந்தால் நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார். அதையடுத்து போலீசார், கலெக்டர் அறை முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தியதற்காக அவரை நேசமணிநகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.