பொதுஅறிவு குவியல் : மரபியல்

* மரபுப் பண்புகள் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுவதை விளக்கும் அறிவியலே மரபியல்.

Update: 2018-03-27 07:41 GMT
* மரபியலின் தந்தை என அழைக்கப்படுபவர் கரிகோர்ஜோகன் மெண்டல்.

* மெண்டல், பட்டாணி தாவரத்தில் நடத்திய ஆய்வுகளில் மரபு பண்புகள் கடத்தலை நிரூபித்தார்.

* மரபுப் பண்புகள் கடத்துபவையை மெண்டல் காரணிகள் (பேக்ட்ஸ்) என்று குறிப்பிட்டார்.

* மெண்டல் குறிப்பிட்ட காரணியைக் குறிக்க 1905-ல் மரபணு (ஜீன்) என்ற சொல்லை ஜோகன்ஸன் உருவாக்கினார்.

* மெண்டல் ஆய்வுக்கு பபயன்படுத்திய பட்டாணி தாவரத்தின் பெயர் பைசம் சட்டவைம்.

* மெண்டல் பட்டாணி தாவரத்தை தன் ஆய்வுக்கு தேர்ந்தெடுக்கக் காரணம், அது குறைந்த வாழ்நாளையும், அதிக வகைகளையும் கொண்டிருந்ததே.

* மெண்டல் பட்டாணி தாவரத்தில் ஒரு பண்பு, இருபண்பு கலப்பு சோதனைகளை மேற்கொண்டார்.

* தனித்துப் பிரிதல் விதி சார்பின்றி ஒதுங்குதல் விதி ஆகியவை மெண்டல் உருவாக்கிய மரபியல் விதிகள்.

* மெண்டலின் ஒரு பண்பு கலப்பை விளக்குவது தனித்துப்பிரிதல் விதி.

* மெண்டலின் இரு பண்பு கலப்பை விளக்குவது சார்பின்றி ஒதுங்குதல் விதி.

* ஒரு பண்பு கலப்பு என்பது உயரமான பட்டாணி தாவரத்தை குட்டையான பட்டாணி தாவரத்துடன் கலப்பு செய்வது.

* ஒரு பண்பு கலப்பு சோதனையின் புறத்தோற்ற விகிதம் 3:1

* ஒரு பண்பு கலப்பு சோதனையின் மரபுத் தோற்ற விகிதம் 1:2:1

* இரு பண்பு கலப்பு என்பது வட்டமான பச்சை விதை பட்டாணி தாவரத்தை, சுருங்கிய மஞ்சள் விதை பட்டாணி தாவரத்துடன் கலப்பு செய்வது.

* இரு பண்பு கலப்பு சோதனையின் புறத் தோற்ற விகிதம் 9:3:3:1

* பிற்கலப்பு என்பது முதல் தலைமுறை தாவரத்தை ஏதேனும் ஒரு பெற்றோர் தாவரத்துடன் கலப்பு செய்வது.

* சோதனை கலப்பு என்பது முதல் தலைமுறை தாவரத்தை ஒடுங்கு பெற்றோர் தாவரத்துடன் கலப்பு செய்வது.

இயற்பியல் விதிகள்

* நீரியல் அழுத்த பம்பு, பாஸ்கல் விதியின் அடிப்படையில் இயங்குகிறது.

* நியூட்டனின் முதல் விதி நிலைம அல்லது சடத்துவ விதி எனப்படும்.

* புறவிசை ஏதும் செயல்படாத வரையில் இயங்கும் பொருள் தொடர்ந்து இயங்கிக் கொண்டும், நிலையான பொருள் தொடர்ந்து நிலையாக இருக்கும் என்பதே முதல் விதி.

* போர்வையை உதற தூசி, பறப்பது நியூட்டனின் முதல் விதிக்குச் சான்று.

* கல் எறிந்து மரத்திலிருந்து மாங்காயை வீழ்த்துவதை முதல் விதிப்படி விளக்கலாம்.

* ஓடும் பேருந்து திடீரென நிறுத்தப்படும்போது முன்சீட்டில் இருப்பவர் நிலை தடுமாறி முன்புறம் சாய்வதை முதல் விதிப்படி விளக்கலாம்.

* நியூட்டனின் இரண்டாவது விதிப்படி ஒரு பொருள் மீது செயல்படும் விசை அதன் நிறை மற்றும் முடுக்கம் ஆகியவற்றுக்கு நேர் விகிதத்தில் இருக்கும்.

* நெரிசலான தெரு ஒன்றில் வாகனம் ஓட்டும்போது அதிக பெட்ரோல் செலவாவதை நியூட்டனின் இரண்டாம் விதிப்படி விளக்கலாம்.

* ஒவ்வொரு விசைக்கும் சமமான அதன் எதிர்திசையில் செயல்படும் விசை ஒன்று உண்டு என்பதே நியூட்டனின் மூன்றாம் விதி.

* துப்பாக்கியின் பின் இயக்கம், நீச்சலடித்தல், ராக்கெட் ஏவுதல் ஆகியவற்றை நியூட்டனின் மூன்றாம் விதியைக்கொண்டு விளக்கலாம்

* கப்பல் மிதப்பதை விளக்குவது ஆர்க்கிமிடிஸ் கோட்பாடு.

* விமானம் புறப்படுவதை விளக்குவது பெர்னோலியின் தத்துவம்.

* புகைவண்டி நம்மை விட்டு விலகிச் செல்லும்போது அதன் ஒலி சுருதி குறைவது போல் தோன்றுவதே டாப்ளர் விளைவு.

* பாரடே விதிகள், லென்ஸ் விதி மற்றும் பிளமிங்கின் வலது கை விதி ஆகியன மின்காந்தத் தூண்டல் பற்றியவை.

* பிளமிங்கின் இடது கை விதி மின்னோட்டத்தின் இயந்திர விளைவு பற்றியது.

* ஆம்பியர் நீச்சல் விதியும், மாக்ஸ்வெல் திருகு விதியும் மின்னோட்டத்தின் காந்த விளைவு பற்றியவை.

* மின்னோட்டத்தின் வெப்ப விளைவு ஜூல் வெப்ப விளைவு விதியால் விளக்கப்பட்டது.

* பாரடேயின் மின்னாற்றல் பகுப்பு விதிகள் மின்னோட்டத்தின் வேதியியல் விளைவை விளக்குகின்றன.

* மின்னோட்டத்துக்கும், மின் அழுத்த வேறுபாட்டுக்கும் உள்ள தொடர்பை விளக்குவது ஓம்.

வினா வங்கி?

1. பெட்ரோல் வாகனங்கள் வெளியிடும் புகையில் இருப்பது என்ன?

2. காற்றில் மகரந்தச் சேர்க்கை செய்யும் தாவரத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு எது?

3. ஐ.நா.வின் பன்னாட்டு நிதி நிறுவனம் எங்கு அமைந்துள்ளது?.

4. நோபல் பரிசு பெற்று முதல் பெண்மணி யார்?

5. பழங்களைப் பற்றிய படிப்பு எது?

6. மகாத்மா காந்தி பிறந்த ஆண்டு எது?

7. பென்சிலினை கண்டுபிடித்தவர் யார்?

8. மனித உரிமைகள் தினம் எப்போது கடைப்பிடிக்கப்படுகிறது?

9. நீரில் எளிதில் கரையும் வாயு எது?

10. இருதயத்திற்கு முன்புறம் உள்ள சுரப்பி எது?

11. மண்புழுவின் கால்கள் எந்த வகையைச் சார்ந்தது?

12. தலையே இல்லாத உயிரினம் எது?

13. புரதச்சத்து குறைபாட்டு நோய் எப்படி அழைக்கப்படுகிறது?

14. சலவைத் தூளில் உள்ள வாயு எது?

15. மலேரியா பரப்பும் கிருமி எது?

விடைகள் :

1. கார்பன் மோனாக்சைடு, 2. நெல், 3. வாஷிங்டன், 4. கியூரி அம்மையார், 5. போமாலஜி, 6. 1869, 7. அலெக்சாண்டர் பிளமிங், 8. டிசம்பர் 10, 9. அமோனியா, 10. தைமஸ், 11. மயிர்க்கால், 12. நண்டு, 13. க்வாசியார்கர், 14. குளோரின், 15. பிளாஸ்மோடியம்

மேலும் செய்திகள்