சுப்ரீம் கோர்ட்டில் வேலைவாய்ப்பு

சுப்ரீம் கோர்ட்டில் ஜூனியர் கோர்ட்டு அட்டன்ட், ஷேம்பர் அட்டன்ட் போன்ற பணிகளுக்கு 78 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

Update: 2018-03-27 04:39 GMT
ஜூனியர் கோர்ட்டு அட்டன்ட் பணிக்கு 65 இடங்களும், ஷேம்பர் அட்டன்ட் பணிக்கு 13 இடங்களும் உள்ளன. இந்த பணிகளுக்கு 18 முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது. 1-3-2018-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படும். 10-ம் வகுப்பு படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் ரூ.300 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள் ரூ.150 கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது. இணைய தள விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் 15-4-2018-ந் தேதியாகும். இது பற்றிய விரிவான விவரங்களை www.sci.gov.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

மேலும் செய்திகள்