தையல்காரரை கொலை செய்தவர் கைது

மனைவியுடன் தொடர்பு வைத்திருந்ததாக கருதி தையல்காரரை கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-03-26 23:45 GMT
மும்பை,

தானே மாவட்டம் காஷிமிரா பகுதியில் கடந்த 12-ந் தேதி வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். போலீஸ் விசாரணையில் அவரது பெயர் ரமேஷ் சேனோரியா (வயது30) என்பதும், தையல்காரர் என்பதும் தெரியவந்தது. அவரது செல்போன் அழைப்புகளை ஆராய்ந்த போது, கடைசியாக அவர் பிரபு குமார் குப்தா என்பவரிடம் பேசியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அவர் ரமேஷ் சேனோரியா காந்திவிலி கிழக்கில் உள்ள தனது சகோதரர் கன்கையா குப்தா (32) என்பவரது வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்ததாகவும், வாடகை தொடர்பாக பேசுவதற்கு தனது சகோதரர் அவரை அழைத்து சென்றதாகவும் கூறினார்.

இந்த நிலையில், கன்கையா குப்தா தலைமறைவானது தெரியவந்தது. அவரது செல்போன் இருக்கும் இடத்தை ஆராய்ந்த போது, அவர் ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை அங்கு சென்று பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் தான் ரமேஷ் சேனோரியாவை கொலை செய்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

கன்கையா குப்தா ஓமனில் வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி காந்திவிலியில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். அங்குள்ள தனக்கு சொந்தமான இன்னொரு வீட்டை ரமேஷ் சேனோரியாவுக்கு வாடகைக்கு விட்டு இருந்தார்.

இந்த நிலையில் தனது மனைவிக்கும், ரமேஷ் சேனோரியாவுக்கும் தொடர்பு ஏற்பட்டதாக கன்கையா குப்தாவுக்கு தகவல் கிடைத்து உள்ளது.

இதையடுத்து மும்பை திரும்பிய அவர் மனைவியை பீகாரில் உள்ள அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார். பின்னர் சம்பவத்தன்று வாடகை தொடர்பாக பேசுவதாக ரமேஷ் சேனோரியாவை காஷிமிரா காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று, மனைவியுடனான தொடர்பை கேட்டு சண்டையிடுள்ளார்.

அப்போது ரமேஷ் சேனோரியாவை சரமாரியாக அடித்து உதைத்து கொலை செய்தார் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கன்கையா குப்தாவை அதிரடியாக கைது செய்தனர்.

மேலும் செய்திகள்