கார் டிரைவர் கொலை வழக்கு: கோர்ட்டில் வாலிபர் சரண்
திண்டுக்கல் அருகே கார் டிரைவர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கோர்ட்டில் சரணடைந்தார்.;
திண்டுக்கல்,
நத்தம் மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 27). கார் டிரைவர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முருகேசன் (27) என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல்–வாங்கல் தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று செந்துறை சாலையில் நின்றிருந்த ரமேசுக்கும், முருகேசனுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த முருகேசன் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரமேசை குத்தினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த நத்தம் போலீசார் ஆவிச்சிப்பட்டி பகுதியில் பதுங்கி இருந்த முருகேசனை கைது செய்தனர்.
மேலும், இந்த கொலையில் தொடர்புடைய சங்கிலிதுரை (25) என்பவரை வலைவீசி தேடி வந்தனர். இதற்கிடையே, நேற்று சங்கிலிதுரை திண்டுக்கல் 3–வது மாஜிஸ்திரேட்டு தீபா முன்னிலையில் கோர்ட்டில் சரண் அடைந்தார். இதையடுத்து, அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதன்பேரில், போலீசார் அவரை திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.