காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் “தமிழக எம்.பி.க்கள் ராஜினாமா செய்து தான் பார்க்கட்டுமே”
காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் தமிழக எம்.பி.க்கள் ராஜினாமா செய்து தான் பார்க்கட்டுமே என்று தமிழிசை சவுந்தரராஜன் சவால் விடுத்தார்.
திருச்சி,
பெரம்பலூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று விமானம் மூலம் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஈரோட்டில் மண்டல மாநாடு என்ற பெயரில் பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராக, திராவிட முன்னேற்ற கழகம் எதிர்ப்பு மாநாட்டினை நடத்தி உள்ளது. இதில் இருந்து திராவிட முன்னேற்ற கழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக பா.ஜ.க. உள்ளது என்பது தெரிகிறது. தமிழகத்தில் வலுப்பெற்று வரும் பா.ஜ.க.வை தமிழக மக்கள் நம்ப தொடங்கி விட்டார்கள்.
சென்னை விமான நிலையத்தில் டீ குடிக்க சென்ற முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், விலையை கேட்டு விட்டு டீ குடிக்காமல் சென்றுள்ளார். இதில் இருந்து அவர் மக்களை விட்டு எவ்வளவு விலகி இருக்கிறார் என்பது தெரியவருகிறது. கிராமப்புறத்தில் டீ விலை எவ்வளவு, விமான நிலையத்தில் எவ்வளவு என்பது கூட தெரியாமல் இருக்கிறார்.
தஞ்சையில் உண்ணாவிரதம் இருந்தவர்கள் (டி.டி.வி.தினகரன் அணியினர்) நன்றி மறக்காமல் அம்மா உணவகத்தில் உணவு அருந்தி உள்ளனர். அதை படம் எடுத்த பத்திரிகை புகைப்படக்காரர்கள் தாக்கப்பட்டு உள்ளனர். ஆதரவாக படம் எடுத்தால் மாலை போடுவார்கள், எதிராக எடுத்தால் தாக்குவார்கள். பொதுமக்களின் தகவல்கள் திருடப்படுவதாக ராகுல்காந்தி தவறான குற்றச்சாட்டுகளை பரப்பி வருகிறார். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு கால அவகாசம் உள்ளது. அதுவரை பொறுமையோடு இருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக எம்.பி.க்கள் ராஜினாமா செய்வதாக பயமுறுத்துகிறார்கள். அவர்கள் ராஜினாமா செய்து தான் பார்க்கட்டுமே.
18 வருடமாக மத்திய அரசில் தி.மு.க இருந்த போது காவிரியின் நிலை என்ன? என்றார்.
அப்போது நிருபர்கள் தூத்துக்குடி ஸ்டெர்லைட் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளிக்காமல் அவர் விரைந்து சென்றார்.
முன்னதாக விமானத்தில் இருந்து இறங்கி தமிழிசை சவுந்தரராஜன் விமான நிலையத்திற்குள் நடந்து வருவதை பார்த்த பா.ஜ.க. தொண்டர்கள் உள்ளே புக முயற்சித்தனர். அவர்களை மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.