கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

குடியாத்தம் அருகே மனைவி தற்கொலைக்கு முயன்றதால் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-03-26 22:00 GMT
குடியாத்தம்,

குடியாத்தத்தை அடுத்த கார்த்திகேயபுரம் பரவக்கல் ரோடு பகுதியை சேர்ந்தவர் சதாசிவம் (வயது 38), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சுமதி (33). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

கடந்த 23-ந் தேதி கணவன், மனைவிக்கு இடைய மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சுமதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையிலும் சேர்த்தனர்.

இந்த நிலையில் மனைவி தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றதால் மனவேதனையில் இருந்த சதாசிவம் நேற்று காலையில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்