டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு
அரவக்குறிச்சியில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
கரூர்,
கரூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
கூட்டத்தில் அரவக்குறிச்சி பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சார்பில் அளித்த மனுவில், “அரவக்குறிச்சி புங்கம்பாடி சாலையில் நங்காஞ்சி ஆற்று பாலத்தின் அருகே தனியார் இடத்தில் டாஸ்மாக் கடை அமைக்க ஏற்பாடு நடந்து வருகிறது.
ஏற்கனவே அந்த பகுதியில் இருந்த டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அகற்றப்பட்டது. தற்போது அதே பகுதியில் மற்றொரு இடத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்பட உள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வேறு இடத்தில் டாஸ்மாக் கடை அமைக்க வேண்டும்” எனக்கூறியிருந்தனர்.
இதேபோல அரவக்குறிச்சி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மற்றொரு மனுவில், அரவக்குறிச்சி செக்குமேட்டு தெருவில் அரசு நிலமான ஆடு அடைக்கும் பட்டியை வேறு தனிநபர் பெயருக்கு பட்டா மாற்றியிருப்பதை மீட்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.
சட்டப்பஞ்சாயத்து இயக்க உறுப்பினர் ஞானசேகர் கொடுத்த மனுவில், “மண்மங்கலம் அருகே ஒத்தகடை மின் தொடர் அமைப்பு கழகம் சார்பில் நெரூர் வடபாகம், தென்பாகம், சோமூர், அச்சமாபுரம், கோயம்பள்ளி ஆகிய கிராமங்களில் விவசாயிகளுக்கு 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது.
ஆனால் கடந்த ஒரு மாத காலமாக இரவு நேரத்தில் 6 மணி நேரமும், பகல் நேரத்தில் 5 மணி நேரமும் நிறுத்தி வைக்கப்பட்டு வழங்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். மேற்கண்ட பகுதியில் மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
ஆதிதமிழர் பேரவை சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், துப்புரவு தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கிட வேண்டும் என தெரிவித்திருந்தனர். தென்னிலை அருகே செம்மாண்டம்பாளையத்தை சேர்ந்த கிராம பொதுமக்கள் அளித்த மனுவில், தங்கள் பகுதியில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் சரிவர குடிநீர் வினியோகிக்கப்படவில்லை எனவும், இதனால் பொதுமக்கள் பாதிப்படைந்திருப்பதாகவும், சீராக குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க கோரியும் கூறியிருந்தனர்.
இதேபோல பொதுமக்கள் பலர் கோரிக்கைகள் தொடர்பாக மனு கொடுத்தனர். மனுக்களை பெற்ற கலெக்டர் அன்பழகன் அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
கூட்டத்தில் மொத்தம் 265 மனுக்கள் பெறப்பட்டன. மாற்றுத்திறனாளி ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில் பரிசு வென்ற வீரர் கார்த்திக்கை கலெக்டர் பாராட்டினார்.
கடந்த வாரம் அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு நினைவாற்றலை மேம்படுத்தும் வகையில் 1,500 மாணவர்களை கொண்டு நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பணியினை சிறப்பாக மேற்கொண்டதற்காக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கணேசமூர்த்தியை கலெக்டர் அன்பழகன் பாராட்டி பொன்னாடை அணிவித்தார். மேலும் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். கூட்டத்தில் கலெக்டர் அன்பழகன் பேசுகையில், “அரசு துறைகளில் சிறப்பாக பணிபுரிபவர்களை ஊக்குவிப்பதற்காக அனைவரது முன்னிலையிலும் முதன்மை கல்வி அதிகாரி பாராட்டப்படுகிறார். இதேபோல அனைத்து அரசு துறை அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை கடமையை தாண்டி சேவை உள்ளத்தோடு பணியாற்றிட வேண்டும்” என்றார்.