கடையின் பூட்டை உடைத்து ரூ.20 ஆயிரம் மது பாட்டில்கள் திருட்டு

அல்லிநகரம் அருகே கடையின் பூட்டை உடைத்து ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2018-03-26 22:00 GMT
அல்லிநகரம்,

தேனி அல்லிநகரம் அருகே உள்ள வடபுதுப்பட்டியில் அரசு மதுக்கடை செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு ஊழியர்கள் மதுக்கடையை பூட்டிவிட்டு சென்று விட்டனர். பின்னர் நேற்று காலையில் வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

பின்னர் கடைக்குள் சென்று பார்த்த போது கடையில் இருந்த மதுபான பாட்டில்கள் திருடப்பட்டு இருப்பது தெரிய வந்தது. மேலும் கடையின் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டு இருந்தது.

கடையில் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள 130 மதுபாட்டில்கள் திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்து கடையின் மேற்பார்வையாளர் மணிசெல்வம் அல்லிநகரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்.

மேலும் செய்திகள்