விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிக்கம்பம் சேதம் போலீசார் விசாரணை

திருவாரூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிக்கம்பத்தை மர்ம நபர்கள் சேதப்படுத்தினர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-03-26 22:45 GMT
திருவாரூர்,

திருவாரூர் அருகே வடகுடி கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த கொடிக் கம்பத்தை மர்மநபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருவாரூர் வடக்கு மாவட்ட செயலாளர் வடிவழகன் தலைமையில் கட்சியினர் சம்பவ இடத்தில் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து வைப்பூர் போலீசில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கட்சி கொடிக்கம்பத்தை சேதப்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என மாவட்ட செயலாளர் வடிவழகன் தெரிவித்தார். 

மேலும் செய்திகள்