ரெயில் மறியலுக்கு முயன்ற 31 பேர் கைது
தென்காசியில் ரெயில் மறியலுக்கு முயன்ற 31 பேரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி,
நெல்லையை தலைமையாக கொண்டு தனி ரெயில்வே கோட்டம் அமைக்க வேண்டும் என்று கோரி தமிழ் தேசியம் கட்சியினர் நேற்று தென்காசியில் ரெயில் மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர். இதையொட்டி தென்காசி ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
தமிழ் தேசியம் கட்சியின் மாநில திட்டக்குழு உறுப்பினர் ஹரி முருகன், மாநில அமைப்பு செயலாளர் அப்பாகண்ணு, மாவட்ட செயலாளர் சுடலை, கடையம் ஒன்றிய தலைவர் பாலமுருகன், ஒன்றிய செயலாளர் குருசரண், மாநில இணை செயலாளர் நாகசேகரன் உள்பட 31 பேர் ரெயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றனர்.
அவர்களை தென்காசி போலீஸ் துணை சூப்பிரண்டு மணிகண்டன், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.