காஞ்சீபுரத்தில் 63 நாயன்மார்கள் வீதி உலா
காஞ்சீபுரத்தில் 63 நாயன்மார்கள் கண்ணாடி விமானத்தில் எழுந்தருளி வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரத்தில் பிரசித்திபெற்ற ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழா கடந்த 21-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய விழாவான 63 நாயன்மார்கள் கண்ணாடி விமானத்தில் எழுந்தருளி வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதையொட்டி ஏகாம்பரநாதர்-ஏலவார்குழலி அம்பாள் ஆகியோர் 63 நாயன்மார்களுடன் காஞ்சீபுரம் முக்கிய வீதியான ராஜ வீதியில் உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அப்போது ஏராளமான பக்தர்கள் ஏகாம்பரநாதர்-ஏலவார்குழலி அம்பாள், 63 நாயன்மார்களை தரிசனம் செய்தனர். ஆங்காங்கே பக்தர்களுக்கு அன்னதானங்கள், குளிர்பானங்கள், நீர், மோர் வழங்கப்பட்டது.
விழாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) தேரோட்டமும், 31-ந்தேதி அதிகாலை பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை காஞ்சீபுரம் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமணி, கோவில் செயல் அலுவலர்(பொறுப்பு) தியாகராஜன், முன்னாள் மேலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் செய்து உள்ளனர்.