குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் பலரால் தவறாக பயன்படுத்தப்படுகிறது

குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் பலரால் தவறாக பயன்படுத்தப் படுகிறது என்று ஐகோர்ட்டு நீதிபதி தெரிவித்தார்.

Update: 2018-03-25 23:35 GMT
அமராவதி,

அமராவதி மாவட்டத்தில் புதிதாக குடும்ப நல கோர்ட்டு கட்டப்பட்டு உள்ளது. இந்த கோர்ட்டு கட்டிடத்தை மும்பை ஐகோர்ட்டு நீதிபதி வசந்தி நாயக் திறந்து வைத்து பேசியதாவது:-

குடும்ப நல கோர்ட்டுகளில் பணி அமர்த்தப்பட்டுள்ள உளவியல் ஆலோசகர்கள், மத்தியஸ்தர்கள் நீதிபதிகளின் தலையீடு இல்லாமலேயே பல பிரச்சினைகளை சுமூக மாக முடித்து வைக்கிறார்கள். இதனால் தேங்கிக் கிடக்கும் வழக்குகள் பல தீர்க்கப்பட்டு வருகின்றன. இவை பாராட் டத்தக்கது. அதே நேரத்தில் பெண்களின் பாதுகாப்புக் காக கொண்டுவரப்பட்ட குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் தற்போது பலரால் தவறாக பயன்படுத்தப்படு கிறது. இதனை குடும்ப நல கோர்ட்டுகள் கணக்கில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதைத்தொடர்ந்து குடும்ப நல கோர்ட்டை அனுகி தங்களது பிரச்சினைகளை தீர்த்துக்கொண்டு தற்போது சேர்ந்து வாழும் 50 தம்பதி களுக்கு பாராட்டு தெரிவிக் கப்பட்டது. 

மேலும் செய்திகள்