மாமல்லபுரம் சோழி பொய்கை குளத்தை தூர் வார வேண்டும்
தமிழகத்தில் முதன் முதலாக கூட்டுறவு பாசன முறை அமல்படுத்தப்பட்ட மாமல்லபுரம் சோழி பொய்கை குளத்தை தூர் வார விவசாயிகள் கோரிக்கை விடுத்து குளத்தை முற்றுகையிட்டனர்.
மாமல்லபுரம்,
தமிழகத்தில் முதன் முதலாக கூட்டுறவு பாசன முறை அமல்படுத்தப்பட்ட மாமல்லபுரம் சோழி பொய்கை குளத்தை தூர் வார விவசாயிகள் கோரிக்கை விடுத்து குளத்தை முற்றுகையிட்டனர்.காஞ்சீபுரம் மாவட்டம் வடக்கு மாமல்லபுரம் பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையையொட்டி 60 ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன. இந்த விளை நிலங்களில் விவசாயிகள் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் நெல்பயிர்கள், கேழ்வரகு, தர்பூசணி மற்றும் காய்கறிகள் பயிரிட்டு வந்தனர்.
இந்த விவசாய நிலங்களுக்கு அங்குள்ள சோழி பொய்கை குளம் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கியது. நாளடைவில் இந்த குளம் புற்கள், செடிகள் வளர்ந்து நீர் ஆதாரம் இன்றி வறண்டுவிட்டது.
மழைக்காலங்களில் இந்த குளத்தில் நீர் தேங்குவதில்லை. இதனால் பல ஆண்டுகளாக விவசாயம் செய்ய முடியாமல் இங்குள்ள விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர். விவசாயிகள் சார்பில் 5 முறை பொதுப்பணித்துறைக்கு மனு கொடுத்தும் இதுவரை இந்த பொய்கை குளத்தை தூர் வார எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று விவசாயிகள் கவலை தெரிவித்தனர். ஒரு பக்கம் விவசாயம் பாதிக்கப்பட்டாலும், மறுபுறம் குடிநீர் ஆதாரம் இன்றியும் இந்த பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
விவசாய சாகுபடி செய்யாததால் இந்த குளத்திற்கு அருகில் உள்ள விளை நிலங்கள் தற்போது வறண்ட நிலையில் காணப்படுகிறது. மேலும் ஆடு, மாடு மேய்ச்சல் நிலமாக மட்டுமே இந்த விளைநிலங்கள் காணப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது.
இந்த குளத்தில் 20 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்திலேயே முதன் முதலாக கூட்டுறவு பாசன முறையில் பம்பு செட் அமைத்து, இலவச மின் மோட்டார் மூலம் விளைநிலங்களுக்கு தண்ணீர் வினியோகிக்கப்பட்டது.
வடக்கு மாமல்லபுரம் மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் நீர் ஆதாரமாகவும் இந்த குளம் விளங்கியது. தற்போது இந்த குளத்தில் மண் சரிவு ஏற்பட்டு புற்கள் முளைத்து காணப்படுகிறது. எனவே 6 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த குளத்தை தூர்வாரி மீண்டும் விவசாயிகளின் வாழ்வாதாரம் செழிக்கவும், விவசாய சாகுபடி செய்யவும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி நேற்று விவசாயிகள் பொதுப்பணித்துறைக்கு எதிராக கோஷம் எழுப்பி முற்றுகையிட்டனர். இந்த குளத்தைபாதுகாக்கவும், தூர் வாரவும் விவசாயிகள் ஒன்றிணைந்து மல்லை நீர்நிலைகள் பாதுகாப்பு மற்றும் மீட்போர் சங்கம் ஒன்றை தொடங்கினர். இந்த தலைவராக என். ஜனார்த்தனம், செயலாளராக சிறுத்தை வீ.கிட்டு, பொருளாளராக வி.இ.உமாபதி மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழக அரசு தூர்வார நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இந்த சங்கம் மூலம் குளத்தை தூர்வார நடவடிக்கை மேற்கொள்வோம் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.