நிதி நிறுவன அதிபர் வீட்டில் ரூ.12 லட்சம் திருட்டு

செங்கல்பட்டில் நிதி நிறுவன அதிபர் வீட்டில் ரூ.12 லட்சம் திருடப்பட்டது.

Update: 2018-03-25 22:48 GMT
செங்கல்பட்டு,

காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு மகாலட்சுமி நகர் யமுனா தெருவை சேர்ந்தவர் பாலசுப்ரமணி (வயது 38). நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் குடும்பத்தினருடன் கோவையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு நேற்று வீடு திரும்பினார்.

அப்போது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.12 லட்சம் மர்மநபர்களால் திருடப்பட்டிருந்தது. இது குறித்து பாலசுப்ரமணி செங்கல்பட்டு தாலுகா போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்