சேவல் சண்டை நடத்திய 5 பேர் கைது

காட்பாடியில் சேவல் சண்டை நடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-03-25 22:10 GMT
காட்பாடி,

காட்பாடி வண்டறந்தாங்கல் பகுதியில் உள்ள சுடுகாடு அருகே, அரசால் தடை செய்யப்பட்ட சேவல்சண்டை நடத்தப்படுவதாக காட்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து அவர் போலீசாருடன் அங்கு சென்றார். அப்போது போலீசார் வருவதை பார்த்ததும் சிலர் ஓடிவிட்டனர். 5 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் பில்லாந்திப்பட்டு சந்தோஷ்(வயது 25), வண்டறந்தாங்கல் வினோத்குமார் (22), ஆரணி ரகுநாதபுரம் ஏகாந்தம் (33), சின்னஅல்லாபுரம் முனவர் (45), ஆற்காடு சேட்டு (34) என்பது தெரிந்தது. அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் பயன்படுத்திய 3 சேவல்கள், 8 மோட்டார்சைக்கிள்கள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்