திருவாடானை யூனியனில் புதிதாக கட்டப்பட்ட கிராம சேவை மையங்களை பயன்பாட்டிற்கு கொண்டுவர கோரிக்கை
திருவாடானை யூனியனில் உள்ள 47 ஊராட்சிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள கிராம ஊராட்சி சேவை மையங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
தொண்டி,
திருவாடானை யூனியனில் உள்ள பொதுமக்கள் தங்களது சாதி, வருமானம், இருப்பிடம் போன்ற சான்றுகள் பெறவும், பட்டா மாறுதல், முதியோர், விதவை உதவித்தொகை பெறவும் தாலுகா அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். மேலும் தங்களது அனைத்து விதமான கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்ப மாவட்ட மற்றும் தாலுகா தலைநகரங்களுக்கு செல்ல வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்ய, பல்வேறு துறைகளின் கீழ் அரசின் சலுகைகளை பெற விண்ணப்பம் செய்வது என அனைத்து தேவைகளுக்கும் பொதுமக்கள் வெளியூர்களுக்கு சென்றுதான் விண்ணப்பம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
இதனால் பொதுமக்களுக்கு வீண் அலைச்சல், அலைக்கழிப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக பலர் அரசின் சலுகைகளை பெறுவதில் சிரமம், பொருளாதார பாதிப்பு, வேலைஇழப்பு போன்ற நிலை உருவாகி விடுகிறது.
இந்த நிலையை மாற்றவும், பொதுமக்கள் தங்கள் கிராமத்தில் இருந்தவாறே அரசின் அனைத்து சலுகைகளை பெறவும், திட்டங்களை பெற்று பயனடையும் விதத்தில் தமிழக அரசு ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் கிராம ஊராட்சி சேவை மையங்களை கட்டிஉள்ளது. இந்த சேவை மையங்கள் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுஉள்ளதால் இந்த மையத்தில் மகளிர் சுய உதவி குழு கூட்டம் நடத்தவும், கிராம வறுமை ஒழிப்பு சங்கம், ஊராட்சி அளவிலான கூட்டங்கள் நடத்தவும் வசதிகள் உள்ளன. மேலும் இன்டர்நெட் வசதியுடன் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைக்கும் மையமாகவும் செயல்படும்.
அதன் அடிப்படையில் பொதுமக்களுக்கு இதன் சேவை கிடைக்க திருவாடானை யூனியனில் கடந்த 2013-14-ம் நிதி ஆண்டு முதல் கிராம ஊராட்சி சேவை மையங்கள் கட்டப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக கட்டப்பட்ட மையங்கள் ரூ.14 லட்சம் 50 ஆயிரம் செலவிலும், அடுத்தகட்டமாக கட்டப்பட்டுள்ள மையங்கள் ரூ.17 லட்சம் செலவிலும் கட்டப்பட்டுஉள்ளன.
இவ்வாறு திருவாடானை யூனியனில் மொத்தம் உள்ள 47 ஊராட்சிகளில் 80 சதவீத மையங்கள் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு உள்ளன. இன்னும் சில இடங்களில் சேவை மையங்கள் கட்டும் பணி முழுமை பெறாமல் உள்ளது. அந்த கட்டிட பணிகளை உடனடியாக முழுமையடைய செய்து அனைத்து சேவை மையங்களையும் உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி கொண்டு வராத நிலை ஏற்பட்டால் இவை அனைத்தும் சமூக விரோதிகளின் புகலிடமாக மாறிவிடும் நிலை ஏற்பட்டுஉள்ளது. எனவே இந்த மையங்களை உடனடியாக அரசும், மாவட்ட நிர்வாகமும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.