ரஜினி மக்கள் மன்றத்தில் வாக்குச்சாவடி உறுப்பினர்களை நியமிக்க முடிவு
கரூர் மாவட்டத்தில் ரஜினி மக்கள் மன்றத்தில் வாக்குச்சாவடி உறுப்பினர்களை நியமிக்க முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கரூர்,
கரூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.ராஜா தலைமை தாங்கி பேசினார். மாவட்ட இணை செயலாளர் சிவானந்தம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் கே.எஸ்.ராஜா பேசுகையில், “கரூர் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளிலும் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் ஒரு செயலாளர், உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் உறுப்பினர்களை தீவிரமாக சேர்க்க வேண்டும். ரஜினிகாந்த்திற்கு மக்கள் வாக்களிக்க தயாராகி விட்டனர். அந்தந்த பகுதியில் நிர்வாகிகள் அனைவரும் களப்பணியாற்ற வேண்டும். மன்றம் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ரஜினிகாந்த் முதல்-அமைச்சர் ஆவது உறுதி” என்றார்.
ஊர்வலம்
கூட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் செயலாளர் மற்றும் உறுப்பினர்களை நியமித்தல் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் கீதம் ரவி, ஜவகர், லோகநாதன், செயற்குழு உறுப்பினர்கள் பாலகுமார், குபேரன் பி.ரமேஷ், மதன், கோபி, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் என்.கார்த்திகேயன், விவசாய அணி செயலாளர் பழனிசாமி, வர்த்தக அணி செயலாளர் ராமு உள்பட பல்வேறு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக நிர்வாகிகள் ஜவகர் பஜாரில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு ஊர்வலமாக மண்டபத்தை வந்தடைந்தனர்.