தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி அமைச்சர் தொடங்கி வைத்தார்
தர்மபுரியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புதுறை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த புகைப்பட கண்காட்சி தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாரதிதாசன் வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்த புகைப்பட கண்காட்சியில் ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது நிறைவேற்றிய சாதனை திட்டங்கள், தமிழக அரசின் சார்பில் நிறைவேற்றப்படும் மக்கள் நலத்திட்டங்கள், தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது.
இதே போன்று எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசின் ஓராண்டு சாதனைகள் நவீன எல்.இ.டி. திரை மூலம் ஒளிபரப்பபட்டது. இந்த ஒளிபரப்பையும் அமைச்சர் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்த கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள், மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி, கல்லூரி கல்வி இணை இயக்குனர் நடராஜன், அரசு கல்லூரி முதல்வர் கண்ணன், கூட்டுறவு சங்க தலைவர்கள் கோவிந்தசாமி, சிவப்பிரகாசம், பழனிசாமி, குருநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.