கோவில் திருவிழாவில் நகை திருடிய கோவையை சேர்ந்த கர்ப்பிணி பெண் கைது
கோவில் திருவிழாவில் நகை திருடிய கோவையை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணை போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய அக்காவை வலைவீசி தேடிவருகின்றனர்.
வடுவூர்,
மன்னார்குடியில் கடந்த 2 மாதமாக தொடர் நகை திருட்டு சம்பவம் நடைபெற்றதையடுத்து திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் உத்தரவின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவேல் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தநிலையில் மன்னார்குடியில் நடைபெற்று வரும் ராஜகோபாலசாமி கோவிலின் பங்குனி பிரம்மோற்சவத்தின் முக்கிய விழாவான வெண்ணெய்த்தாழி உற்சவம் கடந்த 22-ந்தேதி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இந்தநிலையில் மன்னார்குடி சிங்காரவேலு உடையார் தெருவில் வசிக்கும் கோவில் பூசாரி நாராயணசாமி மனைவி கற்பகத்திடம் (வயது 57) 17 பவுன் நகையையும், அசேசம் பாரதிதாசன் நகரை சேர்ந்த தனிக்கொடி மனைவி சந்திராவிடம் (62) 7 பவுன் நகையையும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி சிலர் திருடி சென்றுவிட்டனர்.
தங்கை கைது
நேற்று முன்தினம் மன்னார்குடி பகுதிகளில் இன்ஸ்பெக்டர் மணிவேல் தலைமையில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மன்னார்குடி கடைவீதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த பெண் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பெண்ணை போலீசார் மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் கோயம்புத்தூர் துடியலூர் எம்.ஜி.ஆர். தெருவை சேர்ந்த அமுதாவும் (27), அவரது அக்கா ராதாவும் கோவையில் இருந்து கடந்த 22-ந்தேதி மன்னார்குடிக்கு வந்து கோவில் திருவிழாவில் கலந்துகொண்டு அங்கு கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் திருடியதும், அமுதா 8 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அமுதாவை கைது செய்து மன்னார்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயன் முன்பு ஆஜர்படுத்தினர். பின்னர் அமுதா திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் நகைகளுடன் தப்பி சென்ற அமுதாவின் அக்கா ராதாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.