விழுப்புரத்தில் மதுப்பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

விழுப்புரத்தில் மதுப்பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை முதன்மை கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார்.;

Update: 2018-03-25 22:00 GMT
விழுப்புரம், 

விழுப்புரத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மதுப்பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. விழுப்புரம் ரெயில் நிலைய வளாகத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேரணியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இப்பேரணியில் விழுப்புரம் நகரில் உள்ள அனைத்து பள்ளிகளில் செயல்பட்டு வரும் இளம் செஞ்சிலுவை சங்கம் மற்றும் சாரண, சாரணியர் இயக்கத்தை சேர்ந்த மாணவ- மாணவிகள் 500 பேர் கலந்துகொண்டு முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்று மதுப்பழக்கத்திற்கு எதிராக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

இந்த பேரணி விழுப்புரம் பூந்தோட்டம் ராமகிருஷ்ணா நர்சரி பள்ளியில் முடிவடைந்தது. இதில் ஆயத்தீர்வை உதவி ஆணையர் ராஜேந்திரன், திண்டிவனம் கல்வி மாவட்ட அலுவலர் கிருஷ்ணபிரியா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ராஜேந்திரன், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சரவணன், இளம் செஞ்சிலுவை சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாபுசெல்வத்துரை, சாரண, சாரணியர் இயக்க மாவட்ட செயலாளர் துளசிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்