ஏதாவது ஒன்றை இழந்ததுபோல் எப்போதும் உங்கள் மனம் வாடுகிறதா?
‘நான் செல்வம், செல்வாக்கோடு வாழ் கிறேன். ஆனாலும் எப்போதும் ஏதோ ஒன்றை இழந்ததுபோல் மனம்வாடுகிறது’ என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால், நீங்களும் ஒருவித மன அழுத்தத்தில் சிக்கியிருக்கிறீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாம்.
‘நான் செல்வம், செல்வாக்கோடு வாழ் கிறேன். ஆனாலும் எப்போதும் ஏதோ ஒன்றை இழந்ததுபோல் மனம்வாடுகிறது’ என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால், நீங்களும் ஒருவித மன அழுத்தத்தில் சிக்கியிருக்கிறீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாம். அதுபோல் மிகுந்த மகிழ்ச்சியை அடைபவர்கள்கூட, திடீர் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். அதுபற்றி பார்ப்போம்!
- முதல் சம்பவம்!
சொந்த வீடு என்பது இப்போது பலருக்கும் ஒரு கனவு. இளம் பெண்ணான சுசித்ராவும், அவளது கணவரும் அப்படி ஒரு கனவை கண்டு, அதை நிறைவேற்ற கடுமையாக உழைத்தார்கள். கையில் இருக்கிற தங்க நகைகளை அடகு வைத்தார்கள். இருவர் பெயரிலும் வங்கிகளில் கடனும் வாங்கினார்கள். ஓயாத ஓட்டம். எவ்வளவோ அலைச்சல். பல நாட்கள் தூக்கமில்லை. பார்த்துப்பார்த்து ரசித்து அழகாக வீட்டை கட்டி முடித்தார்கள். ‘இனி கிரகப்பிரவேஷம் செய்வதுதான் பாக்கி’ என்று மகிழ்ச்சியை கொண்டாட வேண்டிய நேரத்தில், சுசித்ராவின் மனதில் ஒருவித சூன்ய உணர்வு உருவாகி, அவளை மன அழுத்தத்திற்குள் தள்ளிவிட்டது.
- மகிழ்ச்சியிலும், வெற்றியிலும்கூட மன அழுத்தம் உருவாகுமா?
ஆம். உருவாகும்! அதற்கு ‘சக்ஸஸ் டிப்ரஷன்’ என்று பெயர். இதற்கு அடிப்படை காரணம் மனதில் ஏற்படும் வெற்றிடம். ‘இத்தனை நாளும் இந்த வீட்டிற்காக ஓடியாடி வேலை பார்த்தோம். அத்தனை வேலையும் முடிந்துவிட்டது’ என்ற எண்ணம் மனதில் உருவாகும்போது, அதோடு ‘இனி வேலையில்லையே’ என்ற சிந்தனையும் சேர்ந்து வரும். அதுவே வெற்றிடத்தை உருவாக்குகிறது.
- இந்த வெற்றிட மன சிந்தனை யாருக்கெல்லாம் வரும்?
ஊரே வியக்கவேண்டும் என்ற எண்ணத்தில் சிலர் மகனுக்கோ, மகளுக்கோ கல்யாண ஏற்பாடுகளை செய்துகொண்டிருப்பார்கள். அழைப்பிதழ் தேர்வு செய்வது, அதற்கான மேட்டரை தயார் செய்வது, பிரிண்ட் அடித்து வாங்குவது, வினியோகிப்பது, கல்யாண ஏற்பாடுகளை செய்வது என்று காலில் சக்கரம் கட்டிக்கொண்டு ஆறு மாதங்களாக அதே சிந்தனையாக இருப்பவர்கள், கல்யாணம் முடிந்த மறுநாளே இந்த ‘வெற்றிட மன நிலைக்கு’ செல்லலாம். பிரமாண்டமான பொது நிகழ்ச்சிகள், விழாக்களை நடத்தி முடிப்பவர்களையும், பெரிய விருது, பாராட்டுகளை வாங்கி முடிப்பவர்களையும் அடுத்த சில நாட்களில் இந்த வெற்றிட மனநிலை தாக்கும்.
- இந்த சக்ஸஸ் டிப்ரஷனின் அறிகுறி என்ன?
திருப்தியின்மை, எதிலும் ஆர்வமின்மை, தேவையற்ற கோபம், கவலை, எதிர்பார்ப்புகள் ஈடேறாதது போன்ற சிந்தனை, மகிழ்ச்சியின்மை, குடும்பத்தினர் அனைவரும் உடனிருக்கும் போதும் தனிமையை உணர்தல்.. இப்படி அவர்களிடம் பலவிதமான அறிகுறிகள் தென்படும்.
-அடுத்த சம்பவம்!
ஜூலி திருமணமாகி பத்தாண்டுகள் கழித்து தாய்மையடைந்தாள். அவள் கர்ப்பிணியாகிவிட்டதை அறிந்த சொந்தபந்தங்கள், நண்பர்கள், அலுவலக சக ஊழியர்கள் அனைவரும் வாழ்த்து மழை பொழிந்தார்கள். அடுத்த பத்து மாதங்கள் அவள் பரபரப்புக்குள்ளும், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குள்ளும் அமிழ்ந்துபோய்விட்டாள். மருத்துவமனை, வீடு என்று கடைசி மாதங்கள் கழிந்து, குழந்தையையும் பெற்றெடுத்தாள். அவள் விரும்பிய குழந்தையே பிறந்தது. மீண்டும் வாழ்த்து மழைதான்!
குழந்தை பிறந்த மூன்றாவது நாள் அவளுக்கு திடீரென்று மனச்சோர்வு உருவானது. எந்த காரணமும் இல்லாமல் அழுதுகொண்டிருந்தாள். குழந்தைக்கு பால்கொடுக்க விருப்பமின்றி காணப்பட்டாள். விரும்பி சாப்பிட்ட உணவுகளைக்கூட தவிர்த்தாள். காரணம் தெரியாமல் பெற்றோர் தவித்துப்போனார்கள். இதனை ‘பேபி ப்ளூ’ என்று கூறுவார்கள்.
பிரசவமான ஒருசில நாட்களில் பெரும்பாலான தாய்மார்கள் இந்த மனோநிலை மாற்றத்திற்கு உள்ளாகிறார்கள். பொதுவாக பிரசவம் முடிந்த ஒன்றரை மாதம் வரை இந்த மன அழுத்தம் நீடிக்கலாம். பின்பு மனோநிலை இயல்புக்கு திரும்பிவிடும். ஆனால் அதுவாகவே நீங்கிவிடும் என்று நினைத்துக்கொண்டிருக்காமல், அதனை போக்கும் வழி பற்றி சிந்தித்து, அந்த அழுத்தத்தில் இருந்து தாய்மார்கள் முடிந்த அளவு சீக்கிரம் விடுபட வேண்டும்.
இதற்கான ‘மருந்தை’ குழந்தையிடமிருந்தும், கணவரிடமிருந்தும், பெற்றோரிடம் இருந்தும் தாயால் பெற முடியும். சிரித்து, விளையாடி, வருடி, அணைத்து குழந்தையிடமிருந்து அந்த மருந்தை பெறலாம். கணவரிடமும் மனம்விட்டுப்பேசி மருந்துபோல் அந்த மகிழ்ச்சியை பெறலாம். பிரசவத்தின் கடைசி மாதங்களில் வயிற்றில் குழந்தை இருப்பதை காரணங்காட்டி மனைவியை வெளியே அழைத்துச் செல்லாதவர்கள், குழந்தை பிறந்த பின்பு அந்த நிலையை படிப்படியாக மாற்ற வேண்டும். பாதுகாப்பான முறையில் மனைவியை வெளியே அழைத்துச்செல்ல முன்வரவேண்டும். மனைவி குழந்தையோடு கணவரும் பொழுதுபோக்கவேண்டும். மனைவிக்கு தேவையான ஓய்வு கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும். தாயின் பெற்றோரும் மனநிலை அறிந்து பழகி, உற்சாகப்படுத்தவேண்டும். பிரசவித்த தாய் பாசிட்டிவ்வான சிந்தனைகளை மனதில் உருவாக்கி, எப்போதும் மகிழ்ச்சி குறையாமல் பார்த்துக்கொண்டால் இந்த மன அழுத்தத்தில் இருந்து எளிதில் மீண்டுவிடலாம்.
- இன்னொரு சம்பவம்!
கவிதாவுக்கு 28 வயது. கல்லூரியில் படித்தபோதே அழகுதேவதையாக வலம் வந்தாள். நடனத்திலும் சிறந்து விளங்கினாள். பின்பு அவள் ஐ.டி.நிறுவனத்தில் வேலைக்காக சேர்ந்தாள். அங்கு பொழுதுபோக்குக்காக நடந்த அழகிப்போட்டியிலும் வென்று, தன் அழகால் கர்வப்பட்டுக்கொண்டாள். அவளுக்கு பெற்றோர் வரன் பார்த்தபோதெல்லாம், வரக்கூடாத கவலை வந்தது. திருமணமும், தாய்மையும் தன் அழகை குலைத்துவிடுமோ என்ற அச்சம் தான் அந்த கவலைக்கு காரணம். அதனால் முடிந்த அளவு திருமணத்தை தள்ளிப்போட்டாள். ஆனாலும் 26 வயதில் திருமணம் முடிந்துவிட்டது. அதன் பிறகு தாய்மையை தள்ளிப்போட எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறாள். அத்தனையும் தோல்வியடைந்து இப்போது தாயாகியும் விட்டாள்.
குழந்தை பிறந்த ஒரு வாரத்தில் அவள் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளானாள். அதற்காக அவளுக்கு கவுன்சலிங் அளித்தபோது, அவள் தனது அழகை நினைத்து அதிகம் கவலைப்படுவது புரிந்தது. அளவுக்கு அதிகமான அந்த கவலையே அவளது மன அழுத்தத்திற்கான காரணம் என்பது தெரியவந்தது.
‘வயிறு பெரிதாகிவிடும்.. முன் அழகு கெட்டுவிடும்.. உடல் குண்டாகிவிடும்..’ என்றெல்லாம் அவள் தேவையற்ற கவலையடைந்திருக்கிறாள். அந்த கவலை அவளுக்கு கணவர் மீதும், குழந்தை மீதும் கோபமாக மாறுவதற்கு முன்னால், காரணம் கண்டறியப்பட்டு, அவளுக்கு சரியான ஆலோசனை தரப்பட்டது. பெண்களால் திருமணத்திற்கு பிறகும், தாய்மைக்கு பிறகும் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள முடியும் என்பதை அவள் மெல்ல மெல்ல உணர்ந்துகொண்டாள்.
தாயாகிவிட்ட இளம் பெண்களுக்கு தங்கள் உடல் கட்டுக்கோப்பு பற்றிய கவலையும், தாங்கள் பெற்றெடுத்த குழந்தைகளின் பாதுகாப்பு பற்றிய பயமும் அதிகம் ஏற்படுகிறது. அந்த கவலையையும், பயத்தையும் வளரவிடாமல் தடுக்கவேண்டும். அதற்கு அவர்களது குடும்பத்தினரின் உதவி மிக அவசியம். மாறாக இளம் தாய்மார்களை தனிமையில் தடுமாறவிட்டால், அவர்கள் குழப்ப சிந்தனைகளை உருவாக்கி, மன அழுத்தத்திற்கு உள்ளாகிவிடுவார்கள்.
இளம் தாய்மார்கள் மன அழுத்தத்திற்குள் சிக்காமல் இருக்க, வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் தானே செய்து முடிப்பேன் என்று அடம்பிடிக்கக்கூடாது. வேலைகளை மற்றவர்களுக்கு பகிர்ந்துகொடுத்துவிட்டு, குழந்தையை பராமரிப்பதிலும், தன்னை பராமரிப்பதிலும் அவர்கள் அதிக கவனத்தை செலுத்தவேண்டும். அவர்களுக்கு எத்தனை வேலைகள் இருந்தாலும், அதை எல்லாம் சற்று நேரம் ஒதுக்கிவைத்துவிட்டு தியானம் செய்யவேண்டும். பிடித்த தியானத்தை செய்தால், மூளையில் நல்ல மாற்றங்கள் உருவாகும். என்டோர்பின் என்ற ஹார்மோன் அதிகமாக சுரந்து மனதை அமைதியாக்கிவிடும். அதனால் தாய்மார்கள் ஆர்வமாக தியானம் மேற்கொள்ளவேண்டும். தினமும் எட்டுமணி நேரம் ஆழ்ந்து தூங்க வேண்டும். பாலூட்டும் தாய்மார்களின் மனதும், உடலும் மகிழ்ச்சியாக இருந்தால்தான் குழந்தையின் வளர்ச்சியும் சிறப்பாக அமையும்.
இன்றைய வாழ்க்கைமுறை எல்லாவிதத்திலும் பெண்களுக்கு மன அழுத்தத்தை உருவாக்கும்விதத்தில்தான் இருக்கிறது. அதில் சிக்கிக்கொள்ளாமல் மகிழ்ச்சியாக வாழும் கலையை ஒவ்வொரு பெண்ணும் கற்றுக்கொள்ளவேண்டும். அது கடினமில்லை. எளிதுதான். நீங்கள் மனது வைத்தால் போதும்!
- விஜயலட்சுமி பந்தையன்.