தஞ்சையில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி 519 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு

தஞ்சையில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி நேற்று நடந்தது. இதில் 519 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

Update: 2018-03-24 22:30 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது. இதில் தடகளம், கைப்பந்து, டென்னிஸ் மற்றும் நீச்சல் ஆகிய போட்டிகள் நடந்தன.

இதில் தடகள போட்டியில் 190 வீரர்களும், 130 வீராங்கனைகளும், கைப்பந்து போட்டியில் 6 ஆண்கள் அணிகளும், 4 பெண்கள் அணிகளும் (120 வீரர், வீராங்கனைகள்), டென்னிஸ் போட்டியில் 20 வீரர்களும், 14 வீராங்கனைகளும், நீச்சல் போட்டியில் 25 வீரர்களும், 20 வீராங்கனைகளும் என மொத்தம் 519 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு


போட்டி தொடக்க விழாவில் மாவட்ட விளையாட்டு அதிகாரி பாபு வரவேற்றார். தஞ்சை மாவட்ட கூடைப்பந்து செயலாளர் பிரபாகரன் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்து போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். விழாவில் தஞ்சை மாவட்ட விளையாட்டு பயிற்றுனர்கள், வீரர்கள், வீராங்கனைகள், உடற்கல்வி இயக்குனர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் மாவட்ட கூடைப்பந்து பயிற்றுனர் சண்முகப்பிரியன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்