கல்லாவி அருகே சிறுமி பாலியல் பலாத்காரம்; கூலித்தொழிலாளி கைது

கல்லாவி அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கூலித்தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-03-24 22:15 GMT
கல்லாவி,

கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அருகே உள்ள சாலமரத்துப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளியின் 6 வயது மகள் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறாள். சம்பவத்தன்று சிறுமி வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி முருகன் (வயது 55) என்பவர் சிறுமியிடம் சென்று, தின்பண்டங்கள் வாங்கி தருவதாக கூறி அழைத்துள்ளார்.

இதனை நம்பிய சிறுமி, முருகனுடன் சென்றுள்ளாள். அப்போது முருகன், சிறுமியை மறைவான இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

கூலித்தொழிலாளி கைது

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சிறுமி வயிற்று வலியால் துடித்தாள். இது குறித்து அவளுடைய பெற்றோர் கேட்டபோது, சிறுமி நடந்த சம்பவத்தை கூறியுள்ளாள். இதை கேட்டு சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவளை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து அவளுடைய பெற்றோர் கல்லாவி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்