அரசு கலைக்கல்லூரி விடுதி மாணவர்கள் இட்லி, சாம்பாரை சாலையில் கொட்டி போராட்டம்

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் படிக்கும் விடுதி மாணவர்கள் உணவு சரியில்லை என கூறி இட்லி, சாம்பாரை சாலையில் கொட்டி போராட்டம் நடத்தினார்கள். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-03-24 23:00 GMT
மோகனூர்,

நாமக்கல்லில் இருந்து மோகனூர் செல்லும் சாலையில் லத்துவாடி கணவாய்பட்டியில் நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி உள்ளது. இதில் இளங்கலை, முதுகலை, மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில் 1,500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த கல்லூரி வளாகத்திலேயே மாணவர் விடுதி உள்ளது. இதில் 171 மாணவர்கள் தங்கி கல்லூரியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலையில் உணவு சரியில்லை என கூறி மாணவர்கள் இட்லி, சாம்பாரை மோகனூர்-நாமக்கல் சாலையில் கொட்டி போராட்டம் செய்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதனால் அந்த பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் கல்லூரி முதல்வர் லீலா குளோரி பாய், மோகனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தி விடுதிக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் செய்திகள்