வடமதுரை, சிங்கபெருமாள் கோவில் ஊராட்சிகளில் அம்மா திட்ட முகாம்

வடமதுரை, சிங்கபெருமாள் கோவில் ஊராட்சிகளில் அம்மா திட்ட முகாம் நடந்தது. ஊத்துக்கோட்டை தாசில்தார் கிருபாஉஷா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து 45 மனுக்களை பெற்றுக்கொண்டார்.

Update: 2018-03-24 22:45 GMT
பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள வடமதுரை ஊராட்சி செங்காத்தாகுளம் கிராமத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. இதற்கு ஊத்துக்கோட்டை தாசில்தார் கிருபாஉஷா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து 45 மனுக்களை பெற்றுக்கொண்டார். தனிதாசில்தார் லதா, வருவாய் ஆய்வாளர் காயத்திரி, முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் கோதண்டன், கிராம நிர்வாக அதிகாரிகள் செல்வராஜ், குணசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் முதியோர் உதவித்தொகை, ரேஷன்கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், பட்டா கோருதல் உள்ளிட்ட 45 கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்களிடம் இருந்து ஊத்துக்கோட்டை தாசில்தார் கிருபாஉஷா பெற்றுக்கொண்டார். இதில் 3 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. 42 மனுக்கள் விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உடனடி தீர்வு காணப்பட்ட 3 மனுக்களுக்கு அதற்கான ஆணையை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருவள்ளூர் மாவட்ட பயிற்சி கலெக்டர் சவுந்தரி பயனாளிகளுக்கு வழங்கி பேசினார்.

முன்னதாக அனைவரையும் கிராம உதவியாளர்கள் சுரேஷ், பிரபு, ஷேக்தாவூத் ஆகியோர் வரவேற்றனர். முடிவில் கிராம உதவியாளர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தை சேர்ந்த சாணாப்புத்தூர் ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் லலிதா தலைமையில் நடைபெற்றது. வருவாய் ஆய்வாளர் வைலட், முன்னாள் ஒன்றியகவுன்சிலர் ராஜீ, கிராம நிர்வாக அதிகாரி சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மொத்தம் 33 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இதில் 5 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு அதற்கான நலத்திட்ட உதவி சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. முடிவில் ஊராட்சி செயலாளர் பிர்லா நன்றி கூறினார்.

செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள்கோவில் ஊராட்சிக்கு உள்பட்ட திருத்தேரி கிராமத்தில் அம்மா திட்ட முகாம் நடந்தது. இதற்கு கிராம நிர்வாக அதிகாரி அபிராமி தலைமை தாங்கினார். வருவாய் ஆய்வாளர் தமிழ்செல்வன். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் கவுஸ்பாஷா, துணை செயலாளர் வடகால் மாரி. ஊராட்சி அ.தி.மு.க. செயலாளர் சந்தானகிருஷ்ணன். கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தனர். கோரிக்கை மனுக்களை சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பாக்யலட்சுமி பெற்றுகொண்டாார். மேலும் அரசு நலத்துறை சார்பில் நல கல்வியாளர் ரமேஷ் தலைமையில் மருத்துவ முகாம்களும் நடந்தன.

காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் அடுத்த வேடந்தாங்கலில் தனி தாசில்தார் ராஜேந்திரன் தலைமையில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. இதில் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அதற்கான தீர்வு காணப்பட்டது. இதில் வருவாய் ஆய்வாளர் வெங்கடாசலம், கிராம நிர்வாக அதிகாரி சுப்பிரமணியன், வட்டார கண் மருத்துவ உதவியாளர் தெய்வநாயகி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பொன்னேரியை அடுத்த ஆலாடு கிராமத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு தனி தாசில்தார் புகழேந்தி தலைமை தாங்கினார். வருவாய் ஆய்வாளர் ரேவதி முன்னிலை வகித்தார். இந்த முகாமில் 50-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. முகாமில் கிராம நிர்வாக அதிகாரிகள் சசி, ஆனந்தன், கயல்விழி, சாந்தினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்