குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

செந்துறை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங் களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-03-24 22:45 GMT
செந்துறை,

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே இருங்களா குறிச்சி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள கீழ தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த தெருவில் உள்ள மக்களுக்கு குடிநீர் வினி யோகம் செய்ய ஆழ்குழாய் அமைத்து அதில் மின்மோட்டார் பொருத்தி குடிநீர் வினி யோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் மின்மோட்டார் பழுது காரணமாக கீழ தெருவில் கடந்த 10 நாட் களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அங்கு உள்ள பொதுமக்கள் குடிநீருக்காக அதிக தொலைவிற்கு சென்று குடிநீர் எடுத்து வருகின்றனர். இதுகுறித்து ஊராட்சி செயலரிடம் பலமுறை புகார் கொடுத்தும் இதுநாள் வரைக்கும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த கீழ தெரு பொதுமக்கள் நேற்று காலிக்குடங்களுடன் செந்துறை- ஆர்.எஸ்.மாத்தூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த செந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில், ஊராட்சி அதிகாரிகளிடம் பேசி உடனடியாக மின்மோட்டாரை சரிசெய்து குடிநீர் வினி யோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததையடுத்து, மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் செந்துறை- ஆர்.எஸ்.மாத்தூர் சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்