எலவனூரில் சூறைக்காற்று: சேதமடைந்த வீடுகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது
எலவனூரில் அடித்த சூறைக்காற்றால் சேதமடைந்த வீடுகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. நிவாரணம் வழங்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
க.பரமத்தி,
சின்னதாராபுரம் அருகே உள்ள எலவனூரில் நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட கூரை, ஓட்டு வீடுகள் சேதம் அடைந்தன.
ஒரு சில வீடுகளின் சுவர்கள் விரிசல் விழுந்தன. 10-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன. இந்த நிலையில் நேற்று காலை அரவக்குறிச்சி தாசில்தார் சந்திரசேகர், க.பரமத்தி மண்டல துணை தாசில்தார் கண்ணன், எலவனூர் கிராம நிர்வாக அலுவலர் வேலுசாமி, சின்னதாராபுரம் வருவாய் ஆய்வாளர் தனசேகர் ஆகியோர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று சூறைக்காற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட வீடுகளை கணக்கெடுத்தனர்.
அப்போது அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், நாங்கள் விவசாயம், கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வருகிறோம். நேற்று (நேற்று முன்தினம்) அடித்த சூறைக்காற்றினால் எலவனூரில் உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகள் சேதம் அடைந்துள்ளன. இதனால் நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளோம். சேதம் அடைந்துள்ள மேற்கூரைகளை சரி செய்ய அரசு நிவாரணம் வழங்கினால் பெரிதும் உதவியாக இருக்கும் என்று கூறினர்.
அப்போது பொதுமக்களிடம் அதிகாரிகள் கூறுகையில், சேதம் அடைந்த வீடுகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. பணிகள் முழுவதும் நிறைவடைந்ததும் மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை அனுப்பப்படும். பின்னர் சம்பந்தப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
மேலும் சின்னதாராபுரம் தொக்குப்பட்டியில் உள்ள வாழை தோட்டங்களில் உள்ள வாழை மரங்கள் பெரும்பாலும் முறிந்து விழுந்துள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளும் நிவாரணம் வழங்கக்கோரி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.