திண்டுக்கல்லில் ஐ.எஸ்.ஐ. சான்றிதழ் பெறாமல் செயல்பட்ட 20 நிறுவனங்களுக்கு நோட்டீஸ், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை
திண்டுக்கல்லில் ஐ.எஸ்.ஐ. சான்றிதழ் பெறாமல் செயல்பட்ட குடிநீர் விற்பனை செய்யும் 20 நிறுவனங்களுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டத்தில் குடிநீர் விற்பனை செய்யும் நிறுவனங்கள் அதிகமாக இயங்கி வருகிறது. இங்கு குடிநீரை சுத்திகரித்து பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். அவ்வாறு விற்பனை செய்வதற்கு உணவு தர நிர்ணய ஆணையத்திடம் ஐ.எஸ்.ஐ. சான்றிதழ் பெற வேண்டும்.
வாகனங்களில் டேங்க் வைத்து குடிநீர் விற்பனை செய்வதற்கும் இந்த சான்றிதழ் பெற வேண்டும். மாவட்டம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை முறையாக பெய்யவில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே பெரும்பாலானோர் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதனால் குடிநீரை சுத்திகரித்து விற்பனை செய்யும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.
குடிநீரினால் பல்வேறு நோய்கள் பரவுவதால், மாவட்டம் முழுவதும் உள்ள குடிநீர் விற்பனை நிறுவனங்களில் ஆய்வு செய்ய உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களுக்கு கலெக்டர் டி.ஜி.வினய் உத்தரவிட்டார்.
அதன்படி உணவு பாதுகாப்பு அலுவலர் நடராஜன் தலைமையில், அதிகாரிகள் செல்வம், சரண்யா ஆகியோர் திண்டுக்கல் நகர் பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது சுமார் 20 நிறுவனங்கள் ஐ.எஸ்.ஐ. தர சான்றிதழ் பெறாமல் செயல்படுவது தெரியவந்தது. மேலும் அங்கு குடிநீரை முழுமையாக சுத்திகரிக்காமல் விற்பனை செய்வதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த 20 நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதே போல திண்டுக்கல் ஆர்த்தி தியேட்டர் சாலையில் செயல்படும் தனியார் சூப்பர் மார்க்கெட்டில் குழந்தைகள் சாப்பிடும் உணவு பொருட்கள் காலாவதியான பின்பும் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு புகார் வந்தது.
அதன் அடிப்படையில் அங்கு விரைந்து சென்ற அதிகாரிகள் சோதனை செய்தபோது காலாவதியான பால் பவுடர் பாக்கெட்டுகள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். பின்னர் அந்த சூப்பர் மார்க்கெட் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதேபோல் ஒட்டன்சத்திரம் பகுதியில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஒரு கடையில், காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. அங்கு சுமார் 300 லிட்டர் குளிர்பானங்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாவது:-
மாவட்டம் முழுவதும் 32 குடிநீர் விற்பனை செய்யும் நிறுவனங்கள் ஐ.எஸ்.ஐ. தர சான்றிதழ் பெற்றுள்ளன. 60-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் சான்றிதழ் பெறாமல் குடிநீர் விற்பனை செய்வது சோதனையில் தெரியவந்துள்ளது. அந்த நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் உணவு பொருட்கள் விற்பனை குறித்து புகார் தெரிவிக்க 9444042322 என்ற செல்போன் எண்ணில் ‘வாட்ஸ்அப்’ மூலமும் புகைப்படத்துடன் புகார் தெரிவிக்கலாம். அந்த புகார் குறித்து 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். இனி வருங்காலங்களில் இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து நடை பெறும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.