கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோவையில் அரசு ஊழியர்கள் பேரணி
கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி கோவையில் ஜாக்டோ ஜியோ அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் பேரணி நடைபெற்றது. இதில் திரளானவர்கள் கலந்துகொண்டனர்.
கோவை,
தமிழ்நாடு ஆசிரியர், அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு (ஜாக்டோ-ஜியோ) சார்பில் நேற்று கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக்கில் இருந்து கோரிக்கை விளக்க பேரணி நடைபெற்றது.புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 21 மாத ஊதிய நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர்களுக்கு கால முறை ஊதியம், சட்டப்பூர்வ ஓய்வூதியம் வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பேரணி நடைபெற்றது.
அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவரும், ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளருமான செந்தில் குமார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு கணினி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் டி.செல்வகுமார் பேரணியை தொடங்கி வைத்தார். தாமோதரன், குமார் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
இந்த பேரணி, பாலசுந்தரம் ரோடு வழியாக வ.உ.சி. பூங்காவை வந்தடைந்தது. இதில் திரளான பெண் ஊழியர்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். மீனாட்சி சுந்தரம் பேரணி முடிவில் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்.
பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் மே மாதம் 8-ந்தேதி சென்னையில் கோட்டையை நோக்கி பேரணியாக சென்று அங்கு முற்றுகை போராட்டம் நடைபெறும் என்றும், இதில் மாநிலம் முழுவதிலும் இருந்தும் திரளான அரசு ஊழியர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.