பெரியதடாகத்தில் உணவு தேடி கோவிலுக்குள் புகுந்த காட்டு யானை
பெரியதடாகத்தில் உணவு தேடி கோவிலுக்குள் புகுந்த காட்டு யானை, காய்கறிகளை தின்று விட்டு சென்றது.
துடியலூர்,
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி பெரியதடாகம் அனுவாவி சுப்பிரமணியர் கோவில், பொன்னூத்து அம்மன் கோவில் அமைந்துள்ளன. இந்த கோவில்களை சுற்றி இருக்கும் வனப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வசித்து வருகின்றன. இவைகள் அவ்வப்போது கோவில்கள், குடியிருப்பு மற்றும் தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை தின்றும், சேதப்படுத்தியும் வருகின்றன. யானைகளின் அட்டகாசத்தால் உயிர் பலிகளும் ஏற்பட்டு வருகின்றன. இதனால் காட்டு யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க அகழிகள் வெட்டியும் கண்காணிப்பிலும் ஈடுபட்டுவருகிறார்கள்.
இந்தநிலையில் பெரியதடாகம் அனுவாவி சுப்பிரமணியர் கோவில் மலையடிவாரத்தில் உள்ள ஸ்ரீலலிதாம்பிகை கோவிலுக்குள் அதிகாலை 2 மணியளவில் காட்டு யானை ஒன்று புகுந்தது.
பின்னர் அந்த யானை அங்கு உணவுகள் ஏதேனும் உள்ளனவா? என்று தேடி உள்ளது. அங்குள்ள சமையல் அறையின் கதவை திறந்து உள்ளே சென்று பாத்திரங்களை காலால் மிதித்து சேதப் படுத்தியது. தொடர்ந்து அங்கு ஒரு பாத்திரத்தில் இட்லி மாவு இருந்ததை அறிந்த அந்த காட்டு யானை அதனை தின்றது. பின்னர் மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் வைக்கும் அறைக்கு சென்று அங்கிருந்த தேங்காயை உடைத்து தின்றுவிட்டு பின் பக்க வழியாக சென்றது. இந்த காட்சிகள் அந்த கோவிலில் அமைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தன.
இதனை பார்த்த கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் வனத்துறையினர் வந்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். தொடர்ந்து காட்டு யானையின் நடமாட்டம் குறித்து அறிய வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து வன அதிகாரி சுரேஷ்குமார் கூறும்போது, தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு மற்றும் தண்ணீரை தேடி மலைப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். கோவிலுக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்ட யானை மலையடிவாரப்பகுதிக்குள் நிற்கிறதா? என்று வேட்டை தடுப்பு காவலர்களை கொண்டு கண்காணித்து வருகிறோம் என்றார்.