கரும்பு விவசாயிகளுக்கு பாக்கி தொகை கொடுக்காவிட்டால் சர்க்கரை ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், கலெக்டர் எச்சரிக்கை
கரும்பு விவசாயிகளுக்கு பாக்கி தொகை கொடுக்காவிட்டால் சர்க்கரை ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் தண்டபாணி எச்சரிக்கை விடுத்தார்.
கடலூர்,
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தண்டபாணி தலைமையில் விவசாயிகள் குறைகேட்புக்கூட்டம் நேற்று நடந்தது. கூட்டம் தொடங்கியதும், குமராட்சி மற்றும் காட்டுமன்னார்கோவில் வட்டார விவசாயிகள் பயிர் காப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்களை அதிகாரிகள் சமாதானப்படுத்தியதைத் தொடர்ந்து இருக்கைகளுக்கு திரும்பிச்சென்றனர். பின்னர் நடந்த கூட்ட விவரம் வருமாறு:-
அத்திப்பட்டு மதிவாணன்:-பயிர் காப்பீட்டு திட்டத்தில் ஏரியாவாரியாக மகசூல் இழப்பீடு எவ்வளவு என்பதை நிர்ணயம் செய்வதிலேயே முறைகேடு நடந்து உள்ளது. லஞ்சம் கொடுத்த பகுதிகளில் இழப்பீடை அதிகரித்து காட்டி உள்ளனர். இதனால் உண்மையிலேயே மகசூல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்கவில்லை.
குமராட்சி பாலு:-சென்னையில் உள்ள இன்சூரன்சு நிறுவன ஊழியர்களுக்கு கமிஷன் கொடுத்தால் தான் இழப்பீடு தொகை கிடைக்கிறது. இதுபோன்ற முறைகேடுகளுக்கு இடமளிக்காமல் அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெண்ணாடம் சோமசுந்தரம்:-கரும்புக்கான பாக்கித்தொகையை சர்க்கரை ஆலைகளிடம் இருந்து பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கலெக்டர்:-கரும்பு கொள்முதலுக்கான தொகையை தராமல் பாக்கி வைத்துள்ள 4 சர்க்கரை ஆலை நிர்வாகங்களுடன் 2 கட்ட பேச்சுவாார்த்தை நடத்தி உள்ளேன். 28-ந்தேதிக்குள் பாக்கித்தொகையை விவசாயிகளுக்கு கொடுத்து விடுவதாக ஆலை நிர்வாகங்கள் உறுதி அளித்துள்ளன. இல்லாவிட்டால் வருவாய் வசூல் சட்டப்படி நடவடிக்கை எடுத்து ஆலைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும்.
கலெக்டர்:-சில காரணங்களுக்காக வீராணம் ஏரியில் தூர்வாரும் பணி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
மங்களூர் மகாராஜா:- வெலிங்டன் ஏரியை அமைத்த வெலிங்டன் பிரபுவுக்கு கொடிக்களம் கிராமத்தில் மணிமண்டபம் கட்டி விவசாய திருவிழா கொண்டாட வேண்டும்.
அண்ணாகிராமம் காந்தி:-மலட்டாற்றில் ஷட்டர் அமைத்தால் 67 கிராமங்கள் பாசன வசதி பெறும்.
கலெக்டர்:-இது தொடர்பாக அமைச்சரிடமும், விழுப்புரம் கலெக்டரிடமும் பேசுகிறேன்.
காந்தி:-கயப்பாக்கம் ஏரி, பூண்டி ஏரி, திருத்துறையூர் ஏரி ஆகியவற்றில் ஆக்கிரமிப்புகள் உள்ளன.
கலெக்டர்:-ஆக்கிரமிப்புகளை அகற்றுவது உதவி கலெக்டர்கள் சம்பந்தப்பட்டது. எனவே அடுத்த கூட்டம் முதல் அனைத்து உதவி கலெக்டர்களும் தவறாமல் கூட்டத்துக்கு வர வேண்டும்.
குறிஞ்சிப்பாடி குமரகுரு:-குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து மணிலா விலையை குறைத்து கொள்முதல் செய்கிறார்கள்.
கலெக்டர்:-நீங்கள் உற்பத்தி செய்த பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க விவசாயிகளுக்குள் ஒற்றுமை இருக்க வேண்டும். விவசாயம் சார்ந்த குழுக்களை அமைத்து விளை பொருட்களுக்கு விலை நிர்ணயிக்க வேண்டும். அந்த விலைக்கு வியாபாரிகள் கொள்முதல் செய்யவில்லையென்றால் பொருட்களை கொடுக்காதீர்கள், வியாபாரிகளே உங்கள் வழிக்கு வருவார் கள்.
குமரகுரு:-பல லட்சம் ரூபாய் செலவு செய்து ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களுக்கு மின்னணு தராசு வாங்கி உள்ளனர். ஆனால் அவற்றை இதுவரை பயன்படுத்தவில்லை.
கலெக்டர்:-குறிஞ்சிப்பாடிக்கு நானே நேரில் வந்து அவற்றின் பயன்பாட்டை ஆரம்பித்து வைக்கிறேன்.
குமரகுரு:-நெய்வேலி நகரின் கழிவுநீரை சுத்திகரிக்காமல் குறிஞ்சிப்பாடியில் உள்ள ஏரிகளுக்கு திறந்து விடுகிறார்கள். இதனால் ஏரியில் மீன்கள் செத்து மிதக்கின்றன.
கலெக்டர்:-அந்த ஏரிகளை மாசுகட்டுபாட்டு வாரிய அதிகாரி நேரில் வந்து பார்த்து ஆய்வு செய்வார்.
ரவீந்திரன்:-கொள்ளிடம் குறுக்கே கதவணை கட்டும் திட்டம் நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு மட்டும் பயனளிப்பதாக உள்ளது. எனவே நமது மாவட்டமும் பயன்பெறும் அளவுக்கு பழைய திட்டமதிப்பீட்டை திரும்ப பெற்றுக்கொண்டு திருத்தப்பட்ட திட்ட மதிப்பீட்டை வெளியிட வேண்டும்.
புவனகிரி ராமலிங்கம்:-எனக்கு 7½ ஹெக்டேர் நிலம் உள்ளது, மீன்குட்டை அமைக்க மானியம் வழங்க வேண்டும்.
கலெக்டர்:- மீன்வளர்ப்புக்கு ரூ.7½ லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. விவசாயம் பொய்த்தால் மீன் உற்பத்தி கை கொடுக்கும். எனவே விவசாயிகள் மீன் வளர்க்க முன்வரலாம்.
குஞ்சிதபாதம்:-பொதுப்பணித்துறை ஏரிகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும்.
கலெக்டர்:-வண்டல் மண் எடுக்காத நீர்நிலைகள் எவையெல்லாம் உள்ளன என்று பொதுப்பணித்துறையிடம் அறிக்கை கேட்டு உள்ளேன். அறிக்கை வந்ததும் அனுமதி வழங்கப்படும்.
குஞ்சிதபாதம்:-வளமான இந்த மாவட்டத்துக்கு ஷேல்கியாஸ், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அதற்கு விவசாயிகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
கலியபெருமாள்:-விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் எடைபோடுவதில் இருந்து பணம் பட்டுவாடா வரை கமிஷன் வாங்குகிறார்கள்.
கலெக்டர்:-எடைபோடும் இடம், பணம் பட்டுவாடா செய்யும் இடம் என அனைத்திலும் கண்காணிப்பு கேமரா பொருத்த மார்க்கெட் கமிட்டி செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கல்லூர் பெரியசாமி:- கடந்த 7-ந்தேதி முதல் எங்கள் ஊரில் மின்சாரம் இல்லாததால் விவசாயபணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக மின்வாரிய கண்காணிப்பு பொறியாளருடன் கலெக்டர் செல்போனில் பேசினார்.
இந்த கூட்டத்தில் வேளாண்மை இணைஇயக்குனர் நாட்ராயன், துணை இயக்குனர் ஜெயகுமார், உதவி இயக்குனர் பூராகவன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.