ஊராட்சி செயலாளரை கண்டித்து தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல்
ராமநத்தம் அருகே ஊராட்சி செயலாளரை கண்டித்து தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
ராமநத்தம்,
ராமநத்தத்தை அடுத்த தொழுதூரில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் மரக்கன்று நடும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில் அதே பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இந்த தொழிலாளர்களை தொழுதூர் ஊராட்சி செயலாளர் செந்தில், தனது நண்பரின் வீட்டு கட்டுமான பணிக்கு வெள்ளாற்றில் இருந்து மணல் எடுத்து வந்து கொடுக்குமாறு வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவருடைய ஆதரவாளர்கள் வேலைக்கு வராமலேயே, அவர்கள் வந்ததாக வருகைப்பதிவேட்டில் பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் ஊராட்சி செயலாளரை கண்டித்து தொழுதூர்-ஆத்தூர் சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்த ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது தொழிலாளர்கள், நாங்கள் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது, ஊராட்சி செயலாளர் செந்தில் அவரது சொந்த வேலையை செய்யும்படி எங்களை வற்புறுத்துகிறார்.
இதுகுறித்து நாங்கள் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தால், அவர்கள் ஊராட்சி செயலாளர் சொல்வதை கேட்காவிட்டால் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட அடையாள அட்டையை ரத்து செய்து விடுவோம் என்று மிரட்டுகின்றனர். எனவே ஊராட்சி செயலாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
அதற்கு போலீசார், இது குறித்து அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதை ஏற்ற தொழிலாளர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.