அரக்கோணம்,
அரக்கோணம் அருகே உள்ள ஆணைப்பாக்கம் கிராமத்தில் ஓடை புறம்போக்கு பகுதியில் 75 சென்ட் இடத்தை தனியார் ஒருவர் கடந்த 5 ஆண்டுகளாக ஆக்கிரமித்து இருப்பதாக வேலூர் மாவட்ட கலெக்டர் ராமன், மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன், ராணிப்பேட்டை உதவி கலெக்டர் வேணுசேகரன் ஆகியோருக்கு புகார்கள் சென்றன.
இதனையடுத்து அவர்களின் உத்தரவின்பேரில், அரக்கோணம் தாசில்தார் பாபு, மண்டல துணை தாசில்தார் சரவணமுத்து, வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கை எடுத்தனர்.