சாணார்பட்டி ஒன்றிய அலுவலகத்தை குடிநீர் கேட்டு பொதுமக்கள் முற்றுகை
சாணார்பட்டி ஒன்றிய அலுவலகத்தை குடிநீர் கேட்டு பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோபால்பட்டி,
சாணார்பட்டி ஒன்றியத்தில் கடந்த 4 வருடங்களாக பருவமழை முறையாக பெய்யவில்லை. ஒன்றியம் முழுவதும் தண்ணீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. தினந்தோறும் பொதுமக்கள் குடிநீருக்காக சாலைமறியல், முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவது தொடர் கதையாக இருந்து வருகிறது.
சாணார்பட்டி ஊராட்சியில் உள்ள ராமன்செடிப்பட்டி, கொண்டன்செடிப்பட்டி, சிங்கன்செடிப்பட்டி ஆகிய 3 கிராமங்களில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த 3 கிராமத்தை சேர்ந்தவர்களும் ராமன்செடிப்பட்டியில் உள்ள ஒரு குடிநீர் தொட்டியில் குடும்பத்துக்கு 5 குடம் என்ற முறையில் தண்ணீர் பிடித்து பயன்படுத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் அந்த ஆழ்துளை கிணற்றில் பொருத்தப்பட்டிருந்த மின்மோட்டார் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழுதானதாக கூறப்படுகிறது. இதனால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. மின்மோட்டாரை பழுது நீக்கம் செய்து முறையாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த 3 கிராமத்தையும் சேர்ந்த பொதுமக்கள், சுமார் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று காலிக்குடங்களுடன் சாணார்பட்டி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சாணார்பட்டி போலீசார் மற்றும் துணைவட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாராஜமாணிக்கம் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மின்மோட்டாரை பழுதுநீக்கம் செய்து முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்றும், இன்னும் 10 நாட்களில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் தண்ணீர் வினியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.