உடுமலையில் எலெக்ட்ரிக்கல் கடையின் மேற்கூரையை பிரித்து 2 கணினி-ரூ.1 லட்சம் திருட்டு
மடத்துக்குளத்தில் எலெக்ட்ரிக்கல் கடையின் மேற்கூரையை பிரித்து 2 கணினி மற்றும் ரூ.1 லட்சத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
மடத்துக்குளம்,
மடத்துக்குளத்தை சேர்ந்தவர்கள் பூபதி மற்றும் நாச்சிமுத்து. இவர்கள் இருவரும் சேர்ந்து கோவை-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் மடத்துக்குளத்தில் எலெக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளனர். இந்த கடையை நேற்று முன்தினம் திறந்து வழக்கம் போல் வியாபாரம் செய்தனர். பின்னர் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு சென்று விட்டனர்.
இந்த நிலையில் நேற்றுகாலையில் கடையை திறப்பதற்காக கடையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் கடைக்கு வந்தனர். பின்னர் கடையை திறந்து உள்ளே சென்றபோது, கடையின் மேற்கூரை பிரிக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் கடையில் இருந்த 2 கணினி மற்றும் எல்.சி.டி., பீரோவில் இருந்த ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் ஆகியவை திருட்டு போயிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து கடை ஊழியர்கள் கடையின் உரிமையாளர்களுக்கும், மடத்துக்குளம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் விரைந்து சென்று, விசாரணை மேற்கொண்டனர். மேலும் கை ரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு, அங்கு பதிவாகி இருந்த கைரேகை மற்றும் தடயங்களை சேகரித்தனர்.
எலெக்ட்ரிக்கல் கடையை மூடிவிட்டு, ஊழியர்கள் சென்ற பிறகு மர்ம ஆசாமிகள், அந்த கடைக்கு சென்று கடையின் பின்புறம் வழியாக மேலே ஏறி, ஆஸ்பெட்டாஸ் வேய்ந்த மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கி கணினி மற்றும் டி.வி.யை திருடி உள்ளனர். பின்னர் அங்கு இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தையும் திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மடத்துக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது “கடந்த ஒரு மாதமாக மடத்துக்குளம் பகுதியில் தொடர்ச்சியாக திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகிறது. எனவே போலீசார் இரவு நேரத்தில் ரோந்து பணியை அதிகப்படுத்த வேண்டும். வாகன சோதனையை தீவிரப்படுத்த வேண்டும்” என்றனர்.