லாஞ்சியடியில் விசைப்படகுகள் நிறுத்த வசதி ஏற்படுத்த வேண்டும், மீனவர்கள் வலியுறுத்தல்
சோளியக்குடி லாஞ்சியடியில் விசைப்படகுகள் நிறுத்த வசதி ஏற்படுத்த வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.;
தொண்டி,
திருவாடானை தாலுகா, தொண்டி அருகே உள்ள சோளியக்குடி லாஞ்சியடி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மீனவர்கள் விசைப்படகுகள் மூலம் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இக்கிராமத்தில் மட்டும் 75-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் உள்ளன. ஆனால் இந்த விசைப்படகுகள் நிறுத்துவதற்கு ஜெட்டி வசதி இல்லாததால் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
இதனால் விசைப்படகுகளை ஆழமான பகுதியில் நிறுத்தி அங்கிருந்து சிறிய படகுகள் மூலம் பிடித்து வரும் மீன்களையும், மீன் பிடி சாதனங்கள் போன்றவற்றையும் கரைக்கு கொண்டுவர நேரம் மற்றும் பணம் கூடுதலாக செலவு செய்ய வேண்டி உள்ளதுடன் மீனவர்கள் பெரிதும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் இக்கிராமத்தில் மீன் இறங்குதளம் மற்றும் ஜெட்டி போன்ற வசதிகளை செய்து தரவேண்டும் என தமிழக அரசு மீன்வளத்துறை அமைச்சர், மீன்துறை உயர் அதிகாரிகள், மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு இங்குள்ள மீனவர்கள் தொடர்ந்து பலமுறை நேரிலும் மனுக்கள் மூலமாகவும் கோரிக்கை விடுத்தும் இதுநாள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என இக்கிராம மக்களின் குற்றச் சாட்டாக உள்ளது.
இதுகுறித்து கிராம மீனவர்கள் கூறியதாவது:- லாஞ்சியடி சிங்காரவேலர் நகரில் 75-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. ஆனால் இந்த விசைப்படகுகள் நிறுத்துவதற்கு ஜெட்டி வசதி இல்லாததால் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகிறோம். இதனால் கிடைக்கக் கூடிய வருமானத்தில் அதிக அளவு படகில் இருந்து மீன்களை கரைக்கு கொண்டுவர செலவு செய்ய வேண்டிஉள்ளது. முறை தவறிய மீன்பிடிப்புகளால் மீன் பிடி தொழில் பெரிதும் பாதிப்படைந்து விட்ட நிலையில் கிடைக்கும் லாபம் இதுபோன்ற செலவுகளுக்கு போய் விடுகிறது. மேலும் பல நிலைகளில் சிரமங்களை சந்திக்க நேரிடுகிறது. எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை மேற்கொண்டு சோளியக்குடி சிங்காரவேலர் நகர் லாஞ்சியடியில் மீன் இறங்குதளம், ஜெட்டி அமைத்து தர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.