பிரான்ஸ் நாடு எதற்கு பிரபலமானது..?

மேற்கு ஐரோப்பாவின் மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாடு, பிரான்ஸ்.

Update: 2018-03-24 00:15 GMT
பிரான்ஸ் தலைநகரமான பாரீஸ் உலகின் மிகச்சிறந்த நகரங்களில் ஒன்று. அங்குள்ள ஈபில் கோபுரம் பிரான்சின் தேச அடையாளமாகவும், உலக அதிசயங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. பிரான்சை மத்திய தரைக்கடல் தழுவுவதால், பல நீளமான அழகிய கடற்கரைகள் அதன் சுற்றுலாத் துறைக்கு அழகு சேர்க்கின்றன. லூவார் உட்பட்ட உலகின் சிறந்த கலை அருங்காட்சியகங்கள், நவீன மாடலான வீடுகள் இங்கு புகழ்பெற்றவை. மேலும், இங்கு ஒயின், ஆடம்பரமான மெத்தைகள், பழமையான லாஸ்காக்ஸ் குகை ஓவியங்கள், லியோன் ரோமன் திரையரங்கு, பரந்த அரண்மனை என வரலாற்று புகழ்பெற்ற விஷயங்களையும் சொல்லிக்கொண்டே போகலாம். அப்படி பிரான்ஸ் நாட்டில் ரசிக்கக்கூடிய இடங்களை இங்கே பார்க்கலாம்.

* பாரீஸ்

ஐரோப்பாவின் முதன்மையான நகரமான பாரீஸ், கலை, கலாசாரம், நாகரிகம் மற்றும் நுகர்வுக்கு ஒரு உலக மையமாக விளங்குகிறது. அதன் 19-ம் நூற்றாண்டு நகர அமைப்பு, குறுக்கும் நெடுக்குமாக அமைந்திருக்கிறது. இதன் பரந்த அகலமான தெருக்கள், ஒரு நதி போல காட்சியளிக் கிறது. 12-ம் நூற்றாண்டின் கோதிக் நோட்ரே டேம் கதீட்ரல், மேலும், கபே கலாசாரம், ப்போர்க் செயிண்ட் ஹோனரின் வடிவமைப்புகள் இங்குள்ள சில சிறப்புகள்.

லூவார் அருங்காட்சியகத்தில் உள்ள டாவின்சியின் ‘மோனாலிசா’ ஓவியம், ‘முஸ்ஸீ டி ஒர்சே’ கலை படைப்பில் மோனட், டெகாஸ், ரினோய்ர் போன்றவர் களின் சிறந்த வேலைப்பாடு. ரம்மியமான நதிக்கரைகள், மலை உச்சிகளின் பனோரமா காட்சிகள், வித்தியாசமான உணவகங்கள், சந்தைகள் அங்கு விற்கும் பொருட்கள் அனைத்தும் பிரான்சின் நாகரிகமான பாரம்பரிய உணவு முறைக்குச் சான்று.

* ஸ்ட்ரெஸ்போர்க்

ஸ்ட்ரெஸ்போர்க், பிரான்சின் வடகிழக்கு நகரங்களான அல்ஸாஸ், சம்பனே, ஆர்டென்னே, லோர்ரெனே நகரங்களின் தலைநகரம். இங்குதான் ஐரோப்பிய பாராளுமன்றம் உள்ளது. இது ஜெர்மனை ஒட்டியுள்ளதால் இரு நாடுகளின் கலாசாரத்தையும் இங்கு காணமுடியும். இங்குள்ள வீடமைப்புகள் தனித்துவமான சிறப்புடையது. அது பிரஞ்சு ஜெர்மன் கட்டிடக்கலை பாணியைச் சொல்கிறது.

இங்கு கதீட்ரல் நோட்ரோ டேமுக்கு அடுத்து, வானியல் கடிகாரம், அதிலிருந்து 140 கி.மீ. தூரத்தில் உள்ள ரினே ஆறு பார்க்கதக்கது. மேலும், இந்த நகரம் ஒரு நதியால் சூழப்பட்டதால் தீவாக காட்சியளிக்கிறது.

16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மத்திய தரைக்கடல் பாலங்கள், கால்வாய்கள், மரக்கட்டைகளால் ஆன வீடுகள், அதில் பாரம்பரியமான மது அருந்தும் அறைகளும் உள்ளன. அவை இன்னும் பழமை சுமந்து நிற்கின்றன. கூட்டன்பர்க்கின் பழைய சமாதி, 1585-ல் கட்டப்பட்ட டவுன் ஹால் பார்க்ககூடியன.

*டூர்ஸ்

டூர்ஸ் (Tours) ஒரு பல்கலைக்கழக நகரம். இது பிரான்சின் செர் மற்றும் லாய்ரே ஆறுகளுக்கும் இடையில் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் கல்லிக் ரோமானியர்கள் குடியேறிய பகுதி.

லாய்ரே பள்ளத்தாக்கில் 12-ம் நூற்றாண்டை சேர்ந்த நுழைவாயில்கள், அலங்கார கோபுரங்கள், தேவாலயங்கள் மறுமலர்ச்சியின் நினைவுச் சின்னங்களாக உள்ளன. மேலும், வரலாற்று இடைக்காலத்தில் உருவாக்கப்பட்ட அமைதியான முற்றங்கள், உருக்குலைந்த கோபுரங்கள், பழமையான கடைகள், உணவகங்கள், சந்தைகள் கலந்து இருப்பது அழகு. பாதுகாக்கப்பட்ட இறைச்சி, பாலாடைக்கட்டி விற்பனை இங்கு சிறப்பு.

* நீஸ்

பிரான்சில் நீஸ் கடற்கரை மிகச்சிறந்த ஒரு சுற்றுலாத்தலம். அரைக்கோளமாக வளைந்த அழகான கடற்கரை அமைப்பு ஒரு சிறப்பு என்றால், எந்த கடற்கரைக்கும் இல்லாத கூலாங்கல் செறிந்த கரைப்பகுதி இன்னொரு புதுமையான ஈர்ப்பு. கலைஞர்களை ஈர்க்கும் கடற்கரை என்ற பெருமை இதற்கு உண்டு. கிரேக்கர்கள்தான் முதலில் இதன் எழிலில் மயங்கி வடிவமைத்தனர். பிறகு, 19-ம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் அதிசயமென மேம்படுத்தினார்கள். யாரையும் ஈர்க்கும் நைஸ் சுற்றுலாத்தலம் நீஸ்.

மேலும் செய்திகள்