வேலூர் மாவட்டத்தை சாலை விபத்தில்லா மாவட்டமாக உருவாக்க ஒத்துழைக்க வேண்டும்
வேலூர் மாவட்டத்தை சாலை விபத்தில்லா மாவட்டமாக உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு பகலவன் கூறினார்.
வாணியம்பாடி,
வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து சாலை விபத்துகள் ஏற்படுவதை தடுக்கவும், பொதுமக்கள், பஸ், ஆட்டோ டிரைவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வாணியம்பாடி சரக காவல்துறையும், வட்டார போக்குவரத்து துறையும் இணைந்து சாலை விதிமுறைகள் கடைபிடிப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் வாணியம்பாடி ஜனதாபுரத்தில் நடந்தது.
கூட்டத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் தலைமை தாங்கினார். வட்டார போக்குவரத்து அலுவலர் மோகன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கருணாநிதி, சிவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி வரவேற்றார்.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் பேசியதாவது:-
மாவட்டத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் 824 பேரும், 2017-ம் ஆண்டில் 604 பேரும் இறந்துள்ளனர். முறையாக சாலை விதிகளை கடைபிடித்தால் விபத்துகளை தடுக்கலாம். இதற்கு டிரைவர்களும், பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
வேலூர் மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். கடந்த ஆண்டுகளில் நடந்த உயிர் சேதங்களை விட இந்த ஆண்டு 2018-ல் பாதியாக குறைய வேண்டும்.
இந்தியாவில் மட்டும்தான் போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் கூட போலீசார் பணியமர்த்தப்படுகின்றனர். இந்த நிலை மாற வேண்டும். வெளிநாடுகளில் இதுபோன்ற நிலை இல்லை. பள்ளி, கல்லூரி வாகனங்கள் ஓட்டுபவர்கள் மாணவர்களின் நலன் கருதி பாதுகாப்பாக ஓட்ட வேண்டும். தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தடுப்பு பகுதியை திடீரென கடந்து செல்வதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் வாணியம்பாடி மாவட்ட உரிமையியல் நீதிபதி சக்திவேல், நீதிபதி ஜெனிபர், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராஜசேகர், பாலாஜி, லதா, சுரேஷ் மற்றும் பள்ளி, கல்லூரி பஸ் டிரைவர்கள், ஆட்டோ டிரைவர்கள் கலந்துகொண்டனர். முடிவில் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரஞ்சித் நன்றி கூறினார்.