லாரி சக்கரத்தில் சிக்கி மாநகராட்சி துப்புரவு தொழிலாளி சாவு
சட்டையில் கொக்கி மாட்டி இழுத்து சென்றதில், லாரி சக்கரத்தில் சிக்கி மாநகராட்சி துப்புரவு தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
மும்பை,
மும்பை மால்வாணி வீர்அப்துல் ஹமித் மார்க் பகுதியில் மாநகராட்சி துப்புரவு தொழிலாளி சங்கர் முருகன் என்பவர் நேற்று முன்தினம் காலை 7.45 மணி அளவில் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த லாரி ஒன்று அவரின் அருகே கடந்து சென்றது.
இதில், துரதிருஷ்டவசமாக லாரியின் பக்கவாட்டில் இருந்த கொக்கியில் சங்கர் முருகன் அணிந்திருந்த சட்டை மாட்டிக்கொண்டது. இதனால் அவரை லாரி தரதரவென சாலையில் இழுத்து சென்றது.
இதை சற்றும் எதிபார்க்காத அவர் அலறினார். இதனை டிரைவர் கவனிக்காமல் லாரியை ஓட்டிச்சென்றார். இந்தநிலையில் சிறிது தூரம் சென்ற நிலையில் சட்டை கிழிந்து சங்கர் முருகன் சாலையில் விழுந்தார். அப்போது, அவர் லாரியின் பின்பக்க சக்கரத்தில் சிக்கிக்கொண்டார். இதில், லாரி சக்கரம் ஏறி, இறங்கியதில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த மால்வாணி போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவர் கணேஷ் கதம்(வயது40) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.