உதவி வேளாண்மை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர்கள் சங்கம் சார்பில் பெரம்பலூர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2018-03-22 22:30 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர்கள் சங்கம் சார்பில் பெரம்பலூர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரம்பலூர் மாவட்ட தலைவர் மணி தலைமை தாங்கினார். அரியலூர் மாவட்ட தலைவர் அரங்க இளவரசன் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில், அனைத்து துறைகளிலும் அரசாணை 56-ஐ பயன்படுத்தி ஊழியர்களை குறைக்க அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக வரித்துறையில் 8 உதவி வேளாண்மை அலுவலர்கள், 5 துணை வேளாண்மை அலுவலர்கள் பதவிகளை துறையால் அரசுக்கு ஒப்படைப்பு செய்ததை கண்டித்து உதவி வேளாண்மை அலுவலர்கள் கோஷம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட பொருளாளர் வீரபாண்டியன், மாவட்ட செயலாளர் பெரியசாமி, மாவட்ட தணிக்கையாளர் இளையராஜா, மாவட்ட அமைப்பு செயலாளர் குமாரசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்