பணிநிரந்தரம் செய்யக்கோரி மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சாலைமறியல் 280 பேர் கைது
பணிநிரந்தரம் செய்யக்கோரி தஞ்சையில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 280 பேர் கைது செய்யப்பட்டனர்.;
தஞ்சாவூர்,
மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 1-ந்தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அரசு அறிவித்த நாள் ஒன்றுக்கு குறைந்த பட்ச ஊதியமான ரூ.380-ஐ உடனடியாக வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்து வருகிறது.
தஞ்சை மாவட்டத்திலும் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த தொழிலாளர்கள் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டனர். நேற்று அவர்கள் தஞ்சை ரெயில் நிலையம் அருகே சாலைமறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
280 பேர் கைது
மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் அமைப்பை சேர்ந்த அருளானந்தையா தலைமையில் இந்த சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இதில் 280 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சாலைமறியல் போராட்டத்தினால் அந்த பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.