கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி, குதிரை வண்டி பந்தயம்

கல்லல் அருகே கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது.

Update: 2018-03-22 22:00 GMT
கல்லல், 

கல்லல் அருகே உள்ள வீழனேரி அழகிய மெய்ய அய்யனார் கோவில் பால்குட திருவிழாவையொட்டி மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது. வீழனேரி-சிவகங்கை சாலையில் நடைபெற்ற இந்த பந்தயத்தில் மொத்தம் 47 வண்டிகள் கலந்துகொண்டன. முதலில் நடைபெற்ற குதிரை வண்டி பந்தயத்தில் மொத்தம் 10 வண்டிகள் கலந்துகொண்டன. இதில் முதல் பரிசை கரூர் பாரத் கம்பெனி வண்டியும், 2-வது பரிசை வீழனேரி சரவணன் வண்டியும், 3-வது பரிசை பனங்குடி ராசு வண்டியும் பெற்றது. அதன் பின்னர் மாட்டு வண்டி பந்தயம், பெரிய மாட்டு வண்டி, நடு மாட்டு வண்டி, சின்ன மாட்டு வண்டி பந்தயம் என 3 பிரிவுகளாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் அறந்தாங்கி பி.இ.டி. வண்டி, தேனி மாவட்டம் தேவாரம் நவினஸ்ரீ வண்டி, மதகுபட்டி வெள்ளைக்கண்ணு வண்டி ஆகியவை முறையே முதல் 3 பரிசுகளை வென்றன.

பின்னர் நடைபெற்ற நடுமாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை ஆட்டுக்குளம் அழகர்மலையான் வண்டியும், 2-வது பரிசை வெளிமுத்தி வாகினி வண்டியும், 3-வது பரிசை பரவை சோனைமுத்து வண்டியும் பெற்றது. இறுதியாக நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை அலங்காநல்லூர் விஸ்வா ரவிச்சந்திரன் வண்டியும், 2-வது பரிசை குண்டேந்தல்பட்டி பவதாரணி வண்டியும், 3-வது பரிசை வீழனேரி சரவணன்செந்தில் வண்டியும் பெற்றது. முடிவில் வெற்றிபெற்ற மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டிகளின் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்