நெல்லை மாவட்டத்தில் அனுமதியற்ற மனைகளை வரன்முறைப்படுத்திட கால அவகாசம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்

நெல்லை மாவட்டத்தில் அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்திட கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறி உள்ளார்.

Update: 2018-03-22 20:30 GMT
நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்திட கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறி உள்ளார்.

 இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–

அனுமதியற்ற மனைப்பிரிவுகள்

நெல்லை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசாணைகள் மற்றும் நகர் ஊரமைப்பு ஆணையாளர் வழிகாட்டி செயல்முறைகளின்படி சார்நிலை அலுவலகங்களில், வரன்முறைப்படுத்திட கொள்கையளவிலான ஒப்புதல் வழங்கப்பட்டு வருகிறது.

வரன்முறைப்படுத்தப்பட்ட மனைப்பிரிவு வரைபடங்கள் சம்மந்தப்பட்ட உள்ளாட்சிகளுக்கு மனைகளை வரன்முறைப்படுத்திட அனுப்பப்பட்டு வருகிறது. ஒப்புதல் பெறப்படாத மனை மற்றும் மனைப்பிரிவுகள் வரன்முறைப்படுத்தப்படாத நிலையில் ஒப்புதல் பெறப்படாத மனை மற்றும் மனைப்பிரிவுக்கு மின்சாரம், தண்ணீர், வடிகால் மற்றும் கழிவுநீர் போக்கும் இணைப்புகள் நீட்டித்து வழங்கப்படமாட்டாது. ஒப்புதல் பெறப்படாத மனை மற்றும் மனைப்பிரிவு பதிவுத்துறை மூலமாக பதிவு செய்யப்படமாட்டாது. ஒப்புதல் பெறப்படாத மனை மற்றும் மனைப்பிரிவில் அமையப்பெறும் கட்டடங்களுக்கு சம்பந்தப்பட்ட அலுவலர்களால் கட்டட அனுமதி வழங்கப்படமாட்டாது.

கால அவகாசம்

மேலும், அனுமதியற்ற மனைப்பிரிவு, மனைகளை வரன்முறைப்படுத்துவதற்கான விண்ணப்பம் சமர்ப்பிக்க கால அவகாசம் வருகிற 3.5.2018 ஆகும். இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு தங்களது அனுமதியற்ற மனையினை வரன்முறைப்படுத்திட சம்மந்தப்பட்ட உள்ளாட்சியை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்