செக்டர் திட்டத்தில் இருந்து தாராவி இயற்கை பூங்காவை பாதுகாக்க சிவசேனா போராடும்
செக்டர் திட்டத்தில் இருந்து தாராவி இயற்கை பூங்காவை பாதுகாக்க சிவசேனா போராடும் என சிவசேனா இளைஞரணி தலைவர் ஆதித்ய தாக்கரே கூறினார்.
மும்பை,
ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதியான மும்பை தாராவி செக்டர் திட்டத்தின் கீழ் சீரமைக்கப்படுகிறது. அங்கு இயற்கை பூங்கா உள்ள இடத்திலும் அடுக்குமாடி கட்டிடம் கட்ட மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தாராவி இயற்கை பூங்காவில் ஆயிரக்கணக்கான மரங்கள் மற்றும் பல்வேறு வகையான செடி, கொடிகள் உள்ளன. இதுதவிர ஏராளமான மூலிகை செடிகளும் வளர்க்கப்பட்டு வருகின்றன.
ஏராளமான பறவைகள், பல்வேறு வகையான வண்ணத்துப்பூச்சிகள், சிலந்திகள், ஊர்வன வகை விலங்குகளும் இந்த பூங்காவில் காணப்படுகின்றன. பச்சை பசேல் என இயற்கை எழில் கொஞ்சும் இந்த பூங்காவை பார்வையிடுவதற்காக ஆண்டுதோறும் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் வந்து செல்கிறார்கள்.
இந்தநிலையில் சர்வதேச காடுகள் தினமான நேற்று மும்பை மாநகராட்சி மேயர் விஸ்வநாத் மகாதேஷ்வர், சிவசேனா இளைஞரணி தலைவர் ஆதித்ய தாக்கரே ஆகியோர் தாராவி இயற்கை பூங்காவுக்கு வந்து பார்வையிட்டனர்.
அப்போது அங்கு வந்திருந்த வன ஆர்வலர்கள் செக்டர் திட்டத்தில் இருந்து இயற்கை பூங்காவை பாதுகாக்க மாநில அரசை வலியுறுத்தும்படி மேயர் விஸ்வநாத் மகாதேஷ்வர் மற்றும் ஆதித்ய தாக்கரேயிடம் கோரிக்கை விடுத்தனர். அப்போது ஆதித்ய தாக்கரே கூறியதாவது:-
மாசு கட்டுப்பாட்டை தடுக்கும் நடவடிக்கையாக பேட்டரி பஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்தது வரவேற்கத்தக்கது. இதுபோன்ற காடுகளை அழிக்காமல் மேம்பாட்டு திட்டங்களை அரசு செயல்படுத்த முனைப்பு காட்ட வேண்டும். தாராவி இயற்கை பூங்காவில் செக்டர் திட்டத்துக்காக மரங்களை வெட்டி இயற்கையை அழித்தால் சிவசேனா போராட்டம் நடத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.