குடிநீர் தேவைக்காக மேட்டூரில் திறக்கப்பட்ட தண்ணீர் மாயனூர் தடுப்பணை வந்தது
மேட்டூரிலிருந்து குடிநீர் தேவைக்காக திறந்துவிடப்பட்ட தண்ணீர் மாயனூர் தடுப்பணைக்கு வந்தது.
கிருஷ்ணராயபுரம்,
மேட்டூர் அணையில் இருந்து சம்பா சாகுபடிக்கு தண்ணீர் கடந்த ஆண்டு (2017)அக்டோபர் மாதம் 2-ந் தேதி திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் விவசாயத்திற்கு ஒரு போக விளைச்சலுக்கு மட்டும் கிடைத்தது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்ததன் காரணமாக விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்தினர். குடிதண்ணீருக்காக மட்டும் 500 கன அடி திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் அருகில் இருக்கும் மாவட்டங்களுக்கு மட்டும் கிடைத்தது. கரூர் மாவட்டம் மாயனூர் காவிரியில் ஒரமாக சிறிதளவு ஊற்று தண்ணீர் மட்டுமே சென்றுக்கொண்டிருந்தது. காவிரி ஆறை நம்பி கரையோர ஊர்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு குடிதண்ணீர் செல்லும் வகையில் ஏராளமான குடிநீர் திட்டங்கள் உள்ளன. இந்நிலையில் காவிரி ஆறு வறண்டதால் குடிதண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவானது.
இந்த நிலையில் குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையிலிருந்து கடந்த 20-ந் தேதி முதல் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் ஆற்றில் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் நேற்று அதிகாலை 2 மணி அளவில் மாயனூரில் உள்ள தடுப்பணைக்கு வந்து சேர்ந்தது. நேற்று காலை நேர நிலவரப்படி மாயனூர் தடுப்பணைக்கு வினாடிக்கு 970 கன அடி தண்ணீர் வந்துக்கொண்டிருந்தது. தடுப்பணைக்கு வரும் தண்ணீர் அப்படியே காவிரியில் திறந்து விடப்பட்டு வருகிறது.
மாயனூருக்கு வந்த தண்ணீர் காலை 10.30 மணியளவில் கிருஷ்ணராயபுரத்தை அடுத்த பொய்கைபுத்தூரை தாண்டி சென்றது. மேட்டூரிலிருந்து பல்வேறு மாவட்டங்களை கடந்து வரும் காவிரி அப்பகுதியில் காவிரி குறுகலாகவும், ஏற்கனவே 500 கனஅடி தண்ணீர் வந்து ஈரப்பதம் இருந்ததால் மாயனூர் வரை வேகமாக வந்துவிட்டது. மாயனூரை அடுத்து காவிரி ஆறு மிகவும் வறண்டு கிடப்பதால் மணல் தண்ணீரை உறிஞ்சிய பின்பு தான் மீதம் பாய்ந்து செல்கிறது. இதனால் திருச்சி மாவட்டம் முக்கொம்பை காவிரி தண்ணீர் சென்றடைய காலதாமதமாகும் என தெரிய வருகிறது.