கார் - லாரி மோதல்; தி.மு.க. பிரமுகர் பலி ஒன்றிய செயலாளர் உள்பட 3 பேர் படுகாயம்
ஏரியூர் அருகே காரும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானதில் தி.மு.க. பிரமுகர் பலியானார். ஒன்றிய செயலாளர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஏரியூர்,
தர்மபுரி மாவட்டம் ஏரியூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் என்.செல்வராஜ். இவர் தனது நண்பர்கள் பழையூரையைச் சேர்ந்த கண்ணப்பன் மகன் தி.மு.க.வைச் சேர்ந்த இளங்கோவன் (வயது 45) உள்பட 3 பேருடன் காரில் ஏரியூர் அருகே உள்ள கலப்பம்பாடியில் இருந்து சேலம் மாவட்டம் மேச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
ஏரியூருக்கும், மேச்சேரிக்கும் இடையே உள்ள பழையூர் வளைவு அருகே கார் வந்தபோது அந்தவழியாக மேச்சேரியில் இருந்து வெங்காயம் ஏற்றிக்கொண்டு பென்னாகரம் நோக்கி சென்ற லாரியும், காரும் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இதில் காரும், லாரியும் கவிழ்ந்தன.
ஒருவர் பலி
இந்த விபத்தில் காரில் இருந்த இளங்கோவன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
செல்வராஜ் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் அந்த பகுதியில் மக்கள் திரண்டனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதுகுறித்து பெரும்பாலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.